தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகுமாயின், ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படின், சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னர் இது தொடர்பாக இறுதி தீர்மானமொன்று எட்டப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.