முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் போராட்டம்

முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்படாது விட்டால் போராட்டம்
எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண முதலமைச்சர் நிதியத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாகவும், நாடாளுமன்றத்தின் முன்பாகவும் நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். 13 ஆவது திருத்தத்தினுள் வைத்து கழுத்தறுப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்ற இந்த நிலையில் சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது. இவ்வாறு வடக்கு  மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் வரவு- செலவுத் திட்ட கொள்கை விளக்க உரை மீது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய அரசு போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்த உதவிகளையும் செய்யப் போவதில்லை. வேலை வாய்ப்புக்களையும் அவர்கள் தரப் போவதில்லை. இவ்வாறானதொரு நிலையில், இங்கு முதலீடு செய்வதற்கு பெருமளவிலானோர் வரத் தயங்குகின்றனர். வந்த சிலரது முதலீட்டு முயற்சிகளும் மத்திய அரசின் நடவடிக்கைகளால் தோல்வியில் முடிவடைந்துள்ளது. மாகாண அரசின் சில நடவடிக்கைகளும் அந்தத் தோல்விக்கு காரணமாகியுள்ளது.

நாங்கள் முதலீட்டாளர்களை அழைக்க வேண்டும். அதற்கான பகிரங்க அழைப்பை விடுக்க வேண்டும். முதலீட்டின் ஊடாகத்தான் பாதிக்கப்பட்ட மக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். பிரச்சினை தீர்ந்த பின்னர்தான் இதைச் செய்யலாம் என்றால் அதற்குள் நாங்கள் தீர்ந்து விடுவோம். மத்திய அரசு வழங்கிய இந்த நிதியை வைத்துக் கொண்டு நாம் எதுவும் செய்ய முடியாது. எங்களது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் ஒன்றும் செய்யவில்லை என்று கேட்பதில்லை.

அவர்கள் எங்களைப் பார்த்துத்தான் கேட்கின்றார்கள். மாகாணசபையினரான நீங்கள் என்ன ஒன்றும் செய்யவில்லை என்று கேட்கின்றார்கள். நாங்கள் இதனை வாயைமூடிக் கேட்க வேண்டிய நிலை இருக்கின்றது. இதிலிருந்து நாங்கள் எவரும் தப்பிக்க முடியாது. 

முதலமைச்சர் நிதியம் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனுமதி கிடைக்கப் பெறாவிட்டால், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாகவும், நாடாளுமன்றத்தின் முன்பாகவும் நாங்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.    
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila