மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவதும் இறுதியுமான அமர்வு நேற்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது இளவாலை சேந்தான் குளம் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் இராஜினியம்மா சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது, எனது மகன் ஆசிர்வாதம் யேசுநாயகம் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக புறப்பட்டுச் சென்றார். ஆனால் அது கைகூடாத காரணத்தால் அவர் மீண்டும் நாட்டுக்கு திரும்பிவந்து நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்தபோது நீர்கொழும்பில் உள்ள அவரது முஸ்லிம் நண்பர்கள் அவருக்கு பாரியளவில் உதவிகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து சிலகாலத்தில் இஸ்லாம் மதத்தினை ஏற்றுக்கொண்ட எனது மகன் முகமட் பைசல் எனப் பெயர் மாற்றமும் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து முஸ்லிம் பெண்ணொருவரைத் திருமணம் செய்து நீர்கொழும்பு ரீட்டார் வீதியில் வசித்து வந்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள். நானும் அவருடனேயே இருந்தேன். 2005 டிசம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு சிலர் எமது வீட்டுக்கு வந்தார்கள். எனது மகனை அழைத்தார்கள். vனது மகன் காய்ச்சல் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது விசாரணை செய்து விட்டு விடுகின்றோமெனக் கூறி உடன் கூட்டிச் சென்று வானொன்றில் ஏற்றிச் சென்றார்கள். அதன் பின்னர் எமது வீட்டிற்கு வருகைதந்த அயலவர்கள் என்ன நடந்ததென விசாரித்தார்கள். வந்தவர்கள் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவின் நபர்கள். ஆகவே உங்கள் மகனை விடுவார்களோ தெரியவில்லை எனக் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து எமது அயலவர்கள் சிலருடன் இணைந்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைச் சந்தித்து இவ்விடயம் தொடர்பாக பேசுவதற்காகச் சென்றிருந்தோம். அவர் எனது மருமகள் உள்ளிட்டவர்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது உங்களுடைய பிள்ளைகள், கணவன்மார் வேறுபெண்களைத் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். நாங்கள் யாரையும் கடத்தவில்லை. அவ்வாறான எவரும் எம்மிடமில்லையெனக் கூறினார் கள். அதன் பின்னர் எனது மருமகள் உள்ளிட்டவர்கள் எதுவுமே பேசாது திரும்பி விட்டார்கள். அதனைத்தொடர்ந்து எமக்கு அச்சம் ஏற்படவும் எனது மகனை தேடும் நடவடிக்கைகளை கைவிட்டிருந்தோம். தற்போது ஆணைக்குழு எனது மகனை மீட்டுத்தரும் என்ற நம்பிக்கையில் சாட்சியமளிக்க வந்துள்ளேன். எனது மருமகள் நான்கு பிள்ளைகளுடன் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதில் சிக்கல்களை எதிர் நோக்குகின்றார். நான் எனது பிள்ளையை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றேன் என்றார். |
காணாமற்போனவரின் தாய் ஒருவருக்கு மகிந்த கூறிய பதில்!
Related Post:
Add Comments