யுத்தத்தில் ஒரு காலை இழந்த இவர், புனர்வாழ்வு முகாமில் இருந்து 2010ஆம் ஆண்டில் விடுதலை பெற்று குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார். வாழ்வாதாரத் தொழிலாக அக்கரைப்பற்று மாநரசபை பொதுச் சந்தையில் கடந்த 5 வருடங்களாக பிளாஸ்ரிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றார். கடந்த 21ஆம் திகதி, அப்பகுதியில் வேறு பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் சிலர் இனவாதம் பேசி அங்கிருந்து அவரை வெளியேறுமாறு தாக்கியுள்ளனர். இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அடுத்த நாளன்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியுள்ள பொலிஸார், மேற்படி போராளியையும் தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதித்தனர். இந்நிலையில், 23ஆம் திகதி பொலிஸாருடன் அங்கு சென்று வியாபாரம் செய்ய அவர் ஆரம்பித்த போதிலும், பொலிஸார் அங்கிருந்த சென்றவுடன் மீண்டும் அவர் மீது மேற்படி நபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் மீண்டும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். |
அக்கரைப்பற்று சந்தையில் இனவாதம் பேசி முன்னாள் போராளி மீது தாக்குதல்!
Related Post:
Add Comments