அதிலும் ரணிலுக்கு இது கைவந்த கலைதான். கருணாவைப் பிரித்த பழைய கதையை நாம் இப்ப சொல்ல வரவில்லை. இப்போது நடப்பதைத்தான் சொல்கின்றோம்.
பிரதான தமிழ் அணியிலிருந்து ‘விக்கி’யை தனியாகக் கொண்டுவந்தாச்சு. இப்ப பலமாக இருப்பது தமிழ் “டயஸ்பொறா”தான். அதில் ஒரு பகுதியினருக்கு தடையை நீக்கி, “செங்கம்பளத்தை”யும் விரித்தால் “டயஸ்பொறா”வின் பலம் குறைக்கப்பட்டுவிடும்.
ஒரு தரப்பினர் நாட்டுக்கும் வந்து போக புலத்திலும் விரிசல்கள் அதிகமாகிவிடும் என்பதுதான் ரணிலின் கணிப்பு என்கிறார் விஷயமறிந்த ஒருவர்.
தடை தளர்த்தப்பட்டுள்ள அமைப்புக்களில் முக்கியமானவை, தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகருடன் நெருக்கமான உறவைக் கொண்டவை. அவரை கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் என அந்த அமைப்புக்கள் அண்மைக்காலங்களில் அழைத்திருந்தமையும் தெரிந்திருக்கும்.
அவற்றின் பிரமுகர்கள் விரைவில் கட்டுநாயக்காவில் வந்து இறங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒரு கல்லில் பல மாங்காய்களை இலக்கு வைக்கிறார் ரணில்!