முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று இராணுவப் புலனாய்வாளர்களின் நெருக்குவாரத்தின் மத்தியில் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் முன்றலில் அனுஷ்டிக்கப்பட்டது.
1995ம் ஆண்டு நாகர் கோவில் பாடசாலை மீதான விமானக் குண்டுத் தாக்குதலின் போது 22 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் முகமாக இன்று(13) முற்பகல் 10.25 மணியளவில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற வணக்க நிகழ்வில் வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உப தவிசாளர் சதீஸ் மற்றும் உணர்வாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.