முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இலக்கு கட்சித் தலைமையா?

இலங்கையில் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன என்று 2011இல் உச்ச நீதிமன்ற நீதியரசராகப் பதவியேற்றபோது திரு. விக்னேஸ்வரன் குறிப்பிட்டதை இப்போது அரசியலில் நுழைந்துள்ளவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.
—————————


கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக வெளியிட்ட கருத்து இப்போது தொடர்கதையாக இழுபடுகிறது.
‘மூக்குள்ளவரை சளி இருக்கும்’ என்ற தென்னாலிராமன் கதைபோல இது இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தேர்தலின்போது, “எல்லோரும் வீட்டுக்கு வெளியே சென்று வாக்களியுங்கள்|’ என்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கேட்கப்பட்டிருந்தது.
தமிழரசுக் கட்சிச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாமென்று விக்னேஸ்வரன் மறைமுகமாக வேண்டுகோள் விடுத்ததாக சுமந்திரன் வழங்கிய வியாக்கியானமே இப்பிரச்சனையின் மூலதனம்.
இதற்குப் பதிலளித்த விக்னேஸ்வரன், “சுமந்திரன் குறிப்பிடுவது சரியானால், உங்கள் வீடுகளை விட்டு சைக்கிளில் பிரயாணம் செய்து வாக்களியுங்கள்” என்று கூறியிருக்க வேண்டும் என சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதிலளித்தார்.
இதுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பாணி. இதனை ஒரு உள்வீட்டு விவகாரமாக கூட்டமைப்பினர் கருதியிருந்தால் இத்துடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
ஆனால் நடைபெறுவதெல்லாம் எதிர்மாறானவை.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரம், ஜெனிவாத் தீர்மானத்துக்கு அமைவான நீதி விசாரணை, இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமிழர் காணிகளை மீட்டெடுத்தல், அரசியல் தீர்வு என்று நீண்ட பட்டியலில் எதுவுமே கவனிக்கப்படாது, முதலமைச்சர் விவகாரத்தை எதற்காகக் கூட்டமைப்பு முதன்மைப்படுத்த விரும்புகிறது.
முதலமைச்சரைக் கழற்றி விடும் நோக்கமா? அல்லது ரணிலினூடாக வடமாகாண சபையைக் கலைத்துவிடும் உள்நோக்கமா?
ஆகஸ்ட் மாதத்தில் முதலமைச்சர் விடுத்த அறிக்கை தொடர்பாக லண்டன் பி.பி.சி கேட்ட கேள்வியொன்றுக்கு அன்று பதிலளித்த இரா.சம்பந்தன், தேர்தல் முடிந்ததும் இது தொடர்பாக விக்னேஸ்வரனுடன் தாம் பேசவிருப்பதாகக் கூறியிருந்தார்.
இப்படிக் கூறி ஆறு மாதங்கள் ஆகியும் நேரடியாகப் பேசுவதைத் தவிர்த்து, எதற்காகப் போகுமிடமெல்லாம் பேசிக் கொண்டு திரிய வேண்டும்.
கடந்த வாரம் மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் (கூட்டமைப்பின் அல்ல) சந்திப்பொன்று இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பாக ஒரு விளக்கமளித்தார்.
இங்கு இவர் குறிப்பிட்ட மூன்று விடயங்கள் உகந்த பரிசீலனைக்குரியவை.
1. ஆஸ்திரேலியாவில் வைத்து சுமந்திரன் இதனைத் தெரிவித்திருக்கக் கூடாது. கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று சொன்ன பின்னரும் இதனைப் பகிரங்கமாக ஏன் பேசினார். (நல்லது! அப்படியானால் சுமந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?)
2. ரணில் விக்கிரமசிங்க அல்லது ஆட்சியிலுள்ள வேறு எவரோ எம்மத்தியில் சிறுசிறு விடயங்கள் தொடர்பாக வேற்றுமையை ஏற்படுத்த முனையலாம். (சரியாகச் சொன்னார்! ரணிலின் கைப்பொம்மையாக சுமந்திரன் செயற்படுவது பகிரங்க ரகசிமாச்சே.)
3. “விக்னேஸ்வரனைத் தலைமைப் பதவிக்கு நியமிக்க விரும்புகிறோம். நீங்கள் போக வேண்டுமென்பது மக்கள் முடிவானால் அதனை நான் ஏற்றுக் கொள்வேன். (இது சம்பந்தரின் திரிபுவாதம். விக்னேஸ்வரன் ஒருபோதும் தலைமைப் பதவியில் நாட்டம் காட்டவில்லை. தாம் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரல்ல என்று பகிரங்கமாக அறிவித்த அவர் எவ்வாறு தலைமைப் பதவியில் கண் வைக்க முடியும்!)

பொறுப்பு வாய்ந்த ஒருவராக இருக்க வேண்டிய சம்பந்தன் உண்மையான பிரச்சனையை திசை திருப்பும் நோக்குடன் விக்னேஸ்வரனைப் பதவியாசை பிடித்து அலைந்து திரிபவராகக் காட்ட முனையக் கூடாது.
கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரே~; பிரேமச்சந்திரன் இது தொடர்பாகக் கருத்துக் கூறுகையில், “முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவிக்காகப் போட்டி போடும் ஒருவராகச் சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்குப் புறம்பானது” என்று தெரிவித்துள்ளார்.
“கூட்டமைப்பின் தலைவர் தலைமையில் நடைபெறும் விடயங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதும், எந்தக் கொள்கையின் அடிப்படையில் இவை நடைபெறுகின்றன என்பதுமே இன்றைய பிரச்சனை” என்றும் பிரேமச்சந்திரன் சுட்டியுள்ளார்.
இவர் பூடகமாகக் குறிப்பிடுவது யாதெனில், முதலமைச்சரின் செயற்பாடுகளிலும் கருத்துகளிலும் தவறில்லை என்பதாகும்.
ஆக, தமிழரசுக் கட்சியினர் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க முனைந்தால், கூட்டமைப்பின் தோழமைக் கட்சிகள் அதற்கு ஆதரவு வழங்க மாட்டா என்பதும் இதனூடாகத் தெரிகிறது.
மாகாணம் ஒன்றின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டவர் அந்தச் செயற்பாடுகளோடு மட்டும் நிற்க வேண்டுமே தவிர தேசிய அரசியலில் ஈடுபடக் கூடாது என்று சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். மாகாணமும் மத்தியும் அரசியல் என்றாகியுள்ள நிலைமையில், கோடு கீறி நீ அங்கு அவர் இங்கே என்று சொல்வதற்குரிய நேரம் இதுவல்ல. இது முதலமைச்சருக்குத் தெரியாததுமல்ல.
முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு முன்னர் இலங்கையின் பல பாகங்களில் நீதிபதி, மாவட்ட நீதிபதி, உயர் நீதிமன்ற நீதிபதி, மேன்முறையீட்டு நீதிபதி என்று பல பதவிகளை வகித்த பின்னரே 2001ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்ற நீதியரசராக இவர் நியமனமானார்.
உத்தியோகபூர்வ பதவியேற்பு வைபவத்தில் தமது இருபுறமும் சிங்களவர்களாக நீதியரசர்கள் அமர்ந்திருக்க விக்னேஸ்வரன் ஆற்றிய உரை முழுமையாக தமிழர்களின் அரசியல் பிரச்சனை சம்பந்தப்பட்டதாகும். (இந்தவேளையில் தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தால் சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.)
விக்னேஸ்வரன் தமது பதவியேற்பின்போது உரையாற்றுகையில், தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன (வுயஅடை சiபாவள றநசந ளயெவஉhநன யறயல) என்ற குறிப்பிட்டதோடு பின்வரும் கருத்தையும் வலியுறுத்திக் கூறினார்.
“வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களே பெரும்பான்மையினர். இவ்விரு மாகாணங்களையும் மற்றைய ஏழு மாகாணங்களுடனும் சேர்த்துக் கணக்கிட்டு தமிழர்களைச் சிறுபான்மையினர் என்று கூறி அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. அவர்கள் தங்கள் மண்ணில் தங்களைத் தாங்களே ஆளும் உரிமையுள்ளவர்கள். அதனையே அவர்கள் கேட்கிறார்கள் என்று நீதியரசர் பதவியேற்புக் கதிரையிலிருந்து துணிச்சலோடு கூறியவர் விக்னேஸ்வரன்.
“நானொரு தமிழ் பேசும் பிரஜை என்னும் வகையில் எனது தாய்மொழியைப் பயன்படுத்தத் தவறினால், நான் விரைவில் எனது சகோதரரின் (சிங்களவரின்) மொழியில் பேச நிர்ப்பந்திக்கப்படுவேன்” என்பது அவர் இங்கு சுட்டிக்காட்டிய இன்னொரு விடயம்.
இவ்வாறு அன்று கூறியவர் ஒரு தசாப்தத்தின் பின்னர், இனப்படுகொலை என்று தீர்மானம் நிறைவேற்றுவதும், சர்வதேச விசாரணையைக் கேட்பதும் புதினமானவையல்ல.
மக்கள் தம்மை எதற்காகத் தெரிவு செய்தார்களோ அதனை மறவாது அவர் செயற்படுகிறார்.
அரசாங்கம் விடும் தவறுகளை துப்பாக்கி வேட்டுப்போல அவர் பறக்க விடுவது, அரசுக்குத் துதிபாடிக் கொண்டிருப்பவர்களுக்குக் க~;டமாக இருந்தால், அது அவரது குற்றமன்று
.
டிசம்பர் மாதம் 10ம் திகதி முதலமைச்சரைச் சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, “பிரிந்து செல்லும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்ட வேளையில் முதலமைச்சர் அளித்த சுருக்கமான பதில் இவ்விடத்தில் பொருத்தமானது:
“பிரிந்து செல்லும் எண்ணம் என்னிடமில்லை. எமக்கிடையிலான முரண்பாடு கொள்கை ரீதியானது”.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila