இலங்iகியல் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தி இந்து எனும் இந்திய ஊடகத்திற்கு செவ்வியளித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்த்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க்பபட்டுள்ள 215 சந்தேக நபர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குமாறும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கோரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மேற்குலகின் பல நாடுகள் பயங்கரவாத பிரச்சினைகளை கடுமையாக எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவதற்கு முன்னதாக ஏனைய அனைத்து பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தேச அரசியல் சாசனத் திருத்தம் தெடர்பில் எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றில் தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது – 215 சந்தேக நபர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படாது
Related Post:
Add Comments