இந்த போராட்டம் இன்றைய தினம் (30) மதியம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கோரிக்கை மனு ஒன்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த, நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, இலங்கையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.