கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்நிகழ்வின் போது பெருந்தொகையான பௌத்த மதகுருமார்கள் கலந்து கொண்டதுடனர்.
பௌத்த தர்மத்தின் படி பௌத்த கற்கைகளை மேற்கொள்ளும் பௌத்த துறவிகளும் கலந்து கொண்டனர்.
இரண்டாம் இணைப்பு
பிக்குகள் தொடர்பான சட்டமூலம் மூன்று நிக்காயக்களினதும் மகா நாயக்க தேரர்களின் அனுமதியுடனேயே நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்!
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிக்குகள் தொடர்பான சட்டமூலம் இறுதி வரைபு அல்லவென்றும் அதனை ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது அல்லது அதில் திருத்தங்களை மேற்கொள்வது மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் அனுமதியுடனேயே நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அமரபுர நிக்காயவின் பழைய எழுத்தாசிரியர்களை நினைவுகூரல்
மற்றும் அமரபுர நிக்காயவின் துறவற, இல்லறவாசிகளுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மற்றும் அமரபுர நிக்காயவின் துறவற, இல்லறவாசிகளுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த சட்டமூலம் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வரையப்பட்ட ஒன்று அல்ல என்றும் 25 வருடங்களுக்கு முன்னர் மகா சங்கத்தினரின் வேண்டுகோளின்படி வரையப்பட்ட ஒன்று என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஆட்சிக்கு வந்த ஒவ்வாரு அரசாங்கமும் அது தொடர்பில் சிற்சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் புதிய அரசம் மகா சங்கத்தினரின் வழிகாட்டலின்பேரில் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இச்சட்டமூலம் இறுதி செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட முன்னர் மகா சங்கத்தினருக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என அறியக் கிடைப்பதோடு, இச்சட்டமூலத்தை மீண்டும் மூன்று நிக்காயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினருக்கு சமர்ப்பித்து அவர்களது பூரண அனுமதியுடன் அதனை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர், புத்தசாசன அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசியல் யாப்பில் பௌத்த சமயம் தொடர்பிலான விடயங்களை மென்மேலும் பலப்படுத்தி புத்தசாசனத்தை மேம்படுத்துவதற்கு முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அமரபுர நிகாயவுக்கும் சாசனத்திற்கும் பெரும்பங்காற்றிய சங்கைக்குரிய தவுல்தென ஞானீஸ்வர மகாநாயக்க தேரர், அக்கமகா பண்டித்த சங்கைக்குரிய கொட்டுகாட தம்மாவாச அனுநாயக்க தேரர், பேராசிரியர் கந்தேகொட விமலதர்ம நாயக்க தேரர், பேராசிரியர் எம்.டி.யு.சில்வா, எல்.எச்.பியசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகா சங்கத்தினர் வருகை தந்திருந்ததோடு, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.