
தமிழ் மக்கள் பேரவையைக் கலைக்காவிட்டால் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நேரிடும் என மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்றை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாண முதலமைச்சருடன் கடந்த வாரம் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அதன்போது நீங்கள் எங்களிற்கு முதல்வராக மாகாணசபைக்கு மட்டும் முதலமைச்சராக இருங்கள் என்று மகாணசபை உறுப்பினர்களால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டடிருந்தது.
இந்நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவையைக் கலைக்காவிட்டால் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊகடமான சிலுமினவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக உருவாக்கப்பட்ட சட்டவிரோத அமைப்பு எனவும் இதனால் இவ் அமைப்பை கலைப்பதாகவும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுளவருவதாக தெரியவருகிறது.