சர்வதேசத்தின் பங்களிப்பு விசாரணைகளில் அவசியம் (ஜனாதிபதி மைத்திரிக்கு யஸ்மின் சூக்கா பதில்


இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் விசாரணைப் பொறி முறைகள் நீண்ட காலமாக தோல்வியடைந்த வரலாறு உள்ள நிலையில், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி நடைமுறையில் நம்பிக்கை வைப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என சர்வதேச உண்மைகள் மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார்.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி க்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத் திட்டம் என்ற அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் சூக்கா இக் கருத்தை பதிவு செய்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகளை பங்கேற்க அனு மதிக்கப் போவதில்லை எனவும், இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளி நாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என்று பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக செவ் வியில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். 

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரத்தியேக செவ்வியில் கூறியிருந்த கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா மனித வுரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்கெனவே அளித்திருந்த வாக்குறுதியில் இருந்து பின் வாங்கும் வகையில், அவர் பிபிசிக்கு தெரிவித்த கருத்துக்கள் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட தாக குற்றம் சுமத்தப்படும் படையினரின் பெயர் விபரங்களை ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு வெளியிடவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதையும் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற அமைப்பின் அறிக்கை விமர்சித்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் ஆட்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் குற் றச்சம்பவங்கள் மற்றும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் இலங்கையின் புதிய ஆட்சியிலும் தொடர்ந்து இடம்பெற்று வருவ தாக அண்மைக்காலங்களில் வெளியான குற்றச்சாட்டுக்களை பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் மறுத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விடுதலைப் புலிகளுடன் நெருக்கமானவர்கள் தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், 2015ஆம் ஆண்டில் இடம் பெற்றிருந்த இத்தகைய 20 சம்பவங்கள் தொடர்பில் தங்களிடம் ஆதாரங்கள் இருப்ப தாகவும், சித்திரவதைகளில் இருந்து விடுதலை என்ற அமைப்பும் இவ்வாறான வேறு சில சம்பவங்களை பதிவு செய்துள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila