யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் பிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ஹ{கோ ஸ்வைரும், பிரதமர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதாக கூறப்பட்டாலும், தமிழ் மக்கள் இன்னும் சந்தேகத்துடனும், அச்சத்துடனுமே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
உரிய அளவில் காணிகள் விடுவிக்கப்படவில்லை. மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
அரசியல் கைதிகள் அவ்வாறே இருக்கின்றனர். இராணுவக்குறைப்பு இடம்பெறவில்லை.
பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லை.
இந்த நிலையில் நல்லாட்சி இடம்பெறுவதாக நம்ப முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.