கௌதாரிமுனையில் களவாக ஹோட்டல் கட்டும் இராணுவத்தினர்! அமைச்சர் குருகுலராஜா

பூநகரி கௌதாரிமுனையை இராணுவத்தினர் சட்டவிரோதமாக பிடித்து ஹோட்டல் கட்டுவதாக வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.
கண்டாவளை பிதேச செயலக பொது மண்டபத்தில் இன்று இடம்பெற்ற �வேல் மகளின் நினைவுகளின் நினைவோடு� என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நான் இனவாதம் பேசவில்லை ஆனால் எமது அழகான இந்த ஊரிலே சுண்டிக்குளத்தை பிடித்து விட்டனர்.

அந்த இடத்தில் இராணுவத்தினர் பெரிய ஹோட்டல் ஒன்றை கட்டி விட்டார்கள்.

அதுமாத்திரமின்றி முல்லைத்தீவிலே நந்திக்கடல்தான் அழகான பகுதி அங்கே சென்று பார்க்கபோவோம் என்றால் போகமுடியாத நிலை அங்கும் இராணுவத்தினரின் பெரிய கோட்டல் இருக்குறது என்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த கவிஞர்களும் அங்கே போய் நின்றால் பல வரிகளை அங்கே தூள் பறக்க எழுதுவார்கள் போல் தோன்றுகிறது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் �வேல் மகளின் நினைவுகளின் நினைவோடு� என்ற குறித்த கவிதை நூலின் சிறப்பு பிரதியையும்  வழங்கி வைத்தார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கண்டாவளை பிரதேச செயலர் முகுந்தன், கிராம சேவையாளர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் கவிஞர்கள் பலர் உள்ளிட்ட பொது மக்களும் கலந்து கொண்டனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila