ஒற்றையாட்சி முறைமை, அதிகாரங்களை பெரும்பான்மையினரின் கரங்களுக்கு கொண்டுசெல்கிறது

கடந்த கால கசப்பான அனுபவங்களைத் தவிர்த்துக் கொள்ளும் விதத்தில்  அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளிலும் எட்டப்பட வேண்டிய அரசியல் இணக்கப்பாட்டிலும் எத்தகைய அடிப்படைத் தன்மைகளை நாங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை தமிழர்களாகிய நாம் தெளிவாக எம் மனங்களில் கொண்டிருக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாண பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் பல்லின சமூகங்கள் மத்தியில் அரசியலமைப்பை உருவாக்குவதல் தொடர்பான கருத்தரங்கொன்று கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்நாட்டின் பிரிபோர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அரசியலமைப்பு கற்கைகளுக்கான நிறுவனம்"பல்லின சமூகங்கள் மத்தியில் அதிகாரப் பகிர்வு சவால்கள், மனக் காட்சிகளின் அரசியலமைப்பு முன்மாதிரிகள்' என்ற கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.  இங்கு உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது;

97 ஆண்டுகளுக்கு முன்னர் சேர் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் ஈ.ஜே. சமரவிக்ரம ஆகிய இரு சிங்கள அரசியல் தலைவர்கள் தேசியத் தலைவரும் தமிழருமான சேர் பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சுட்டிக்காட்டி எழுதியிருந்தனர். நினைவுக்கு எட்டாத காலத்திலிருந்து தமிழர்கள் தமது சொந்தப் பகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.
அதேவேளை சிங்களவர்கள் தமது பகுதிகளில் பெரும்பான்மையாக இருந்து வருகின்றனர். அந்தப் பகுதிகள் அதிகளவுக்கோ அல்லது குறைந்தளவிலோ வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொருந்துவனவாக இருக்கின்றன. இங்கு வந்திருக்கும் எமது கௌரவ உறுப்பினர்களில் அநேகமானோர் தெற்கிலுள்ள மாகாணங்களின் ஒரு பகுதியிலிருந்தோ அல்லது இந்த இரு மாகாணங்களிலிருந்தோ வருகை தந்துள்ளனர்.

1956 க்குப் பின்னர் அந்த இரு சிங்களத் தலைவர்களினதும் அறிக்கையை கலப்படம் செய்யும் அல்லது மாற்றியமைக்கும்  வரலாற்றுப் போக்கு காணப்பட்ட போதிலும் அந்த அறிக்கை வரலாற்று ரீதியாக சரியானதென இப்போதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் ஆகிய இரு சமூகங்களும் நினைவுக்கெட்டாத காலப்பகுதியிலிருந்து இத்தீவில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழர்களின் இராச்சியம் அல்லது யாழ்ப்பாண இராச்சியத்தின் இருப்பானது மேற்கு நாடுகள் வருகை தரும் வரை  வரலாற்று ரீதியாக அடையாளம் காணப்பட்டதாக இருந்துள்ளது. 2013 இல்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் எம்மில் பெரும்பான்மையானோர் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அரசியல் தீர்வு தொடர்பாக எமது நிலைப்பாட்டுடன் தொடர்புபட்டதாக அது காணப்படுகிறது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு தொடர்பாக எமது நிலைப்பாடு

கொள்கைகளும் விசேட அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகளும் தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு மிக முக்கியமானதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. பிரதானமாக இத்தீவில் வசிக்கும் மக்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட இறைமையின் ஊடாக ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதுடன் இது தொடர்பு பட்டதாக உள்ளது.
பின்வரும் முக்கியமான விடயங்கள் அதிகாரப் பகிர்வு மற்றும்  உண்மையான நல்லிணக்கத்தை வென்றெடுப்பதற்கும் இறுதிச் சமாதானத்திற்கும் இலங்கையிலுள்ள சகல மக்களினதும் மேம்பாட்டிற்கும் அடிப்படையானவையாக அமைந்துள்ளன.

சிங்கள மக்களுடனும் ஏனையவர்களுடனும் இந்தத் தீவில் தமிழ் மக்கள் தனித்துவத்துடனும் நினைவுக் கெட்டாத காலப்பகுதியிலிருந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுபூர்வமான வாழ்விடமாக அருகருகாமையில் பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கொண்டுள்ளன.

தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கான உரித்தைக் கொண்டவர்கள்.
அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் வடக்கு  கிழக்கு இணைந்த மாகாண அலகாக ஏற்படுத்தப்படுவது அவசியம்.

சமஷ்டிக் கட்டமைப்பை அடிப்படையாக்கக் கொண்டதாகவும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்திலும் இந்த மாகாணங்கள் ஒரே அலகாக இணைக்கப்படுவதல் அவசியம்.

பகிர்ந்து கொள்ளப்பட்ட இறைமையின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வானது காணி, சட்டம், ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, வளங்கள், நிதி, அதிகாரங்கள் உட்பட சமூக, பொருளாதார அபிவிருத்தி  என்பவற்றைக் கொண்டதாக அமைய வேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக எமது இன நெருக்கடிக்கு நாங்கள் தீர்வை தேடுகின்றோம்.

பல்வேறுப்பட்ட அதிகாரப் பகிர்வு முன்மாதிரிகள்

பல்வேறு விதமான அதிகாரப் பகிர்வு முன்மாதிரிகளை முன்னெடுக்கும் போது நாம் எதிர்கொண்ட, எதிர்நோக்கும் சவால்கள் பல்லின சமூகங்களில் காணப்படும் வேறுபட்ட மனக் காட்சிகள் பற்றிய அறிவை எமக்கு எமது கற்றறிந்த சொற்பொழிவாளர்கள் வழங்குவார்கள்.
இலங்கையர்களாகிய நாம் புதிய அரசியலமைப்பை எமக்காகத் தயாரிப்பதற்கு எமக்குப் பொருத்தமான பொறிமுறைகளை அடையாளம் காண வேண்டியுள்ளது. இந்தக் கட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்மானம் 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட போது எதனைக் குறிப்பிட்டது என்பதைத் தெரிவிப்பது பிரயோசனமானதாக அமையக் கூடும்.
13 ஆவது திருத்தமானது நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை மோசமாகப் பாதித்துள்ளது எனவும் பாராளுமன்றத்தின் மேலாண்மையை பாதித்துள்ளது எனவும் குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பின்வருமாறு உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது அதனை இங்கு நான் மேற்கோள் காட்டுகிறேன்.

“அரசின் ஒற்றையாட்சித் தன்மைகள் மத்திய பாராளுமன்றத்தின் மேலாண்மையைக் கொண்டதாகவும் துணை இறைமை அமைப்புகள் இல்லாத தன்மையை கொண்டதாகவும் பாதிப்பற்ற விதத்திலும் தொடர்ந்து இருக்கின்றன.
மாகாண சபைகள் இறைமை சட்டவாக்க அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை. ஆனால் அவை துணை அமைப்புகளாக மட்டுப்படுத்தப்பட்ட சட்டவாக்க அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு துணையாகப் பயன்படுத்துகின்றன.
பாராளுமன்றம் அதன் சட்டவாக்க அதிகாரத்தை சட்ட அதிகாரத்துடன் புதிதாக உருவாக்கப்பட்ட எந்தவெரு அமைப்பிற்கும் சாதகமானதாக கையளித்திருக்கவில்லை.
அதிகாரப் பகிர்வு கருத்தீடானது மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை தனது மேலாண்மை விட்டுக் கொடுப்பு இல்லாமல் பயன்படுத்துவது என்று அர்த்தப்படும். அதிகாரப் பகிர்வானது சட்டவாக்க அல்லது நிர்வாக அல்லது இரண்டும் கொண்டதாக பரவலாக்கத்திலிருந்தும் தனித்துவமானதாக அமைய முடியும்.
சட்டமூலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டமானது மக்களின் இறைமையை மீறவில்லை. அதற்கு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரம் தேவைப்படவில்லை.

வட மாகாண சபையில் கடந்த இரு வருடங்களாக எமது அனுபவம் உயர்நீதிமன்றத்தின்  நீதிபதி குழாமின் பெரும்பான்மையின் வார்த்தைகளை நிரூபித்துள்ளது. அது உண்மையில் சரியானதாகவும் இருக்கின்றது. மாகாண சபை முறைமையானது நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை மாற்றியிருக்கவில்லை.
ஆனால்  நவீன காலத்தில் இது கடினமானதாகத் தோன்றுகிறது. பல்வேறு பட்ட அரசியலமைப்புகளை ஒருவர் பரிசீலிக்கும் போது அவற்றை ஒற்றையாட்சி, சமஷ்டி அல்லது சம்மேளனமாக வகைப்படுத்துகின்றார். 2012 இல் அரசியல் அறிமுகம் என்ற தலைப்பின் கீழான தமது நூலை ரொபேர்ட் கார்னரும் பிறரும் வெளியிட்டிருந்தனர்.
 அதில் நான் மேற்கோள் காட்டுகிறேன். “ஒற்றையாட்சி அல்லது சமஷ்டி முறைமைகளுக்கிடையிலான பிரத்தியேகமான தெரிவை தாங்கள் உருவாக்க வேண்டியிருப்பதாக நாடுகள் நீண்டகாலத்திற்கு கருத மாட்டாது. அவை சில வேளைகளில் கலப்பு  ஏற்பாடுகளை மேற்கொள்கின்றன.

இது சமஷ்டி மற்றும் ஒற்றையாட்சி அரசுக்கிடையில் அதிகளவுக்கு சிக்கலான வடிவங்கள் தேசங்களில் காணப்படுகின்றது என்பதை செம்மையான முறையில் தனித்துவமாகக் காண்பிக்கின்றது. ஒற்றையாட்சித் தன்மையை பிரதானமாக கொண்டதாகவும்  அல்லது சமஷ்டியை பிரதானமானதாக கொண்டதாகவும் நாடுகள் விளங்குகின்றன.
அத்துடன் ஒற்றையாட்சி அல்லது சமஷ்டியும் இல்லாத நாடுகளும் காணப்படுகின்றன. ஆதலால் பல்வேறு இணைந்த தன்மைகளுடன் காணப்பட முடியும். இந்தியாவும் சீனாவும் கலப்புத் தன்மைக்கு உதாரணங்களாக காணப்படுகின்றன என்று நான் நம்புகிறேன்.
இந்த விடயத்தால் ஒற்றையாட்சி அல்லது சமஷ்டி மட்டுமே என்ற இரு காரண நிலைப்பாட்டிலிருந்தும் அதிகாரப் பகிர்வு பிரச்சினையை நாங்கள் பார்ப்பதை எம்மால் வரையறை செய்ய முடியாது. அத்தகைய பல்வேறுபட்ட சாத்தியப்பாடுகள் இணைந்த தன்மைகள் தொடர்பாக எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 கடுமையான ஒற்றையாட்சி முறைமை அதிகாரத்தைப் பெரும்பான்மையினரின் கரங்களில் வைக்கின்றது என்ற உண்மையை மனதில் கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாகும். அத்துடன் அதன் விளைவாக எதேச்சாதிகாரம், பெரும்பான்மை வாதம், பெரும்பான்மையை மையப்படுத்திய மேலாதிக்கம் என்பன சிறுபான்மை துணை அலகை பாதிக்கச் செய்யும்.
ஒற்றையாட்சி முறைமையில் அதிகாரப் பரவலாக்கம் கருவியாக விளங்குகிறது. ஆனால் அதிகாரப் பகிர்வு வேறுபட்டதாகும். பெரும்பான்மையிலிருந்தும் வேறுபட்ட மக்களின் தனித்துவத் தன்மையை அதிகாரப் பகிர்வு ஊடாக எவ்வாறு நாங்கள் பரிசோதிக்க போகின்றோம் என்ற விடயம் பேணிக் கடைப்பிடிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இலங்கையின் வட கிழக்கிலுள்ள மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துக் கொண்டவர்கள் என்ற தகைமைகளுக்கு முழுமையாக உரித்துடையவர்களாகக் கருதுகின்றோம்.
ஐ.நா. கூட்டு ஒப்பந்தங்களில் வெளிப்படுத்தப்பட்ட தன்மைகளின் அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்தானவர்களாக இருக்கின்றோம் என்று கருதுகின்றோம். இந்த நாடானது பல் மொழி, பல்லின, பல்மத நாடாக விளங்குகிறது.
 இந்நிலையில் இந்த கட்டமைப்பிற்குள் எமது சுயநிர்ணய உரிமையை எவ்வாறு அங்கீகரிக்கப் போகின்றோம் என்பது நாட எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.
சமஷ்டி என்பது அரசாங்கத்தின் அதிகளவிலான அதிகாரத்தை மட்டுப்படுத்துகிறது.
இது இறைமையுள்ள அதிகாரங்களை தோற்றுவிப்பதனூடாக இதனை மட்டுப்படுத்துகின்றன. தேசிய அரசாங்கத்தின் அதிகாரம், மாநில அரசாங்க அதிகாரம் என இரு இறைமையுள்ள அதிகாரங்கள் சமஷ்டியில் தோற்றுவிக்கப்படுகின்றன.
ஆதலால்  அமெரிக்காவில் இந்த இரண்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. தனித்தனியான அதிகாரங்கள் உள் மட்ட வரையறைக்குள் அமுல்படுத்தப்படுகின்றன. எந்தவொரு அரசாங்கத்தையும் சட்டவாக்க நிறைவேற்றம் மற்றும் நீதித்துறை கருவிகளை வகுத்துக்கொள்வதன் மூலம் உள்மட்டத்தில் வரையறைப்படுத்துகின்றன.
அத்துடன் வெவ்வேறு கிளைகளுக்கு தனித்தனியான செயற்பாட்டை வழங்குவதன் மூலம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு அவை நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த வழிமுறையில் ஏற்றத் தாழ்வுகள் சீர் செய்யப்படுவதற்கான தன்மை காணப்படுகின்றது. இன்று இன நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான பரந்துபட்ட அரசியல் அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.
இந்த கருத்துகள் தொடர்பாக இன்று எம்மால் பரிசீலிக்க முடியுமென நம்புகிறேன். வட மாகாண சபையின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான பிரக்ஞையுடன் எமது சமூகத்தின் மீது 1956 க்குப் பின்னர் என்ன நடைபெற்றிருக்கின்றது என்பது பற்றி நாம் பிரக்ஞையுடன் இருக்கின்றோம். பண்டாரநாயக்க  செல்வநாயகம் உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டிருந்தது. உறுதிமொழிகள் மீறப்பட்டன.
சுனாமியின் பின்னரான செயற்பாட்டு கட்டமைப்பு 2005 இல் நிராகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசியலமைப்பு ரீதியாக கட்டமைப்பானது அதிகாரப் பகிர்வை மேம்படுத்துவதுடன் அடையாளத்தையும் மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாக்கின்றது என்பதையும் இலங்கையை தத்தமது பகுதிகளில் தமது வரலாற்று பூர்வமான இல்லமாகக் கொண்ட இலங்கை சமூகங்களின் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பதற்கான உரித்தைக் கொண்டது என்பதையும் நாங்கள் மனதில் கொண்டிருப்பது அவசியமானதாகும்.

அத்துடன் ஏனைய நாடுகளிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் பற்றியும் நாங்கள் அறிந்திருப்பது எமக்கு அவசியமானதாகக் காணப்படுகின்றது.  அதன் மூலம் மீண்டும் அதே தவறுகள் திரும்ப இழைக்கப்படக்கூடாது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது ஒன்றுபட்ட எதிர்காலத்தை நாங்கள் மனதில் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.
எமது அடையாளத்தைப் பாதுகாக்கவும் எமது உள் விவகாரங்களை நாங்கள் முகாமைத்துவப் படுத்தவும் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ஐ.நா. மற்றும் சர்வதேச கூட்டு ஒப்பந்தங்களையும் சாசனங்களையும் கொள்கைகளையும்  அடிப்படையாக்கக் கொண்டு ஐக்கிய இலங்கைக்குள் எமது எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுகிறது. இந்தத் தருணத்தில் பின்வரும் விடயத்தை குறிப்பிடுவது பெறுமதியானதாகும்.

திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்துடன் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது. அனர்த்தத்துக்கு பின்னரான / சுனாமி, புனர்வாழ்வு, மீள் கட்டுமானம், அபிவிருத்தி என்பவற்றுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேசத்தினால் உறுதியளிக்கப்பட்ட நிதிகளைப் பயன்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை மற்றும் கருத்தொருமைப்பாடு என்பவற்றின் அடிப்படையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தது.
ஆயினும் அப்போதைய ஆட்சியின் உறுப்பினர் ஒருவரால் உயர்நீதிமன்றத்தில் இதற்கு எதிராக சவால் விடுக்கப்பட்டது. அந்தப் பொறிமுறை ஓரங்கட்டப்பட்டது. இரு வருடங்களுக்கு மேலாக பதவியில் இருக்கும் நான் 13 ஆவது திருத்தத்தின் வரையறைகள் தொடர்பாக கூர்மையான பிரக்ஞையுடன் இருக்கின்றேன். 1987 இல் இத்திருத்தம் உள்வாங்கப்பட்டது.
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வை வழங்குவதை நோக்கமாக இத்திருத்தம் கொண்டிருந்தது வடக்கு, கிழக்கு தமிழர்களின் சார்பில் இந்திய அரசாங்கமும் அச்சமயம் ஆட்சியிலிருந்த இலங்கை அரசும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் தலைமையின் கீழ் இருந்த அரசாங்கத்துடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. எவ்வாறாயினும் அச்சமயம் இருந்த இலங்கை தலைமைத்துவத்தின் தரப்பில் நேர்மைத் தன்மை குறைவானதாக இருந்தது.
கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டவற்றை வழங்குவதில் அப்போதைய அரசியல் தலைமைத்துவத்தின் தரப்பில் நேர்மைத் தன்மை குறைவானதாக இருந்தது. மறைந்த அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், தற்போதைய தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் 1987 அக்டோபர் 28 திகதியில் அச்சமயம் இந்தியப் பிரதமராக விளங்கிய ராஜீவ் காந்திக்கு இந்த விடயம் தொடர்பாக கடிதம்ஒன்றை எழுதியிருந்தனர்.

அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் அரசியல் இணக்கப்பாடு எமது கடந்த கால கசப்பான அனுபவத்தை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் எட்டப்பட வேண்டும் என்ற விடயத்தில் எதனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். என்பது பற்றி தமிழர்களாகிய நாங்கள் எமது மனதில் தெளிவான தன்மையை கொண்டிருப்பது தேவையானதாகும்.
இந்த விடயம் சுவிஸ் தூதுவரை உதவியளிக்குமாறு கேட்பதற்கு என்னைத் தூண்டியது. சுவிற்சர்லாந்தில் கன்டோன்கள் மற்றும் கூட்டு சம்மேளன முறை மூலம் அல்லது இதர பகுதிகளில் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வு முறைமைகளின் முன்மாதிரிகள், தன்மைகள், பரிமாணங்கள் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
வட மாகாண சபை புதிய கட்டமைப்பில் இருக்கின்றது. உறுப்பினர்களாகிய நீங்களும் நிர்வாகமும் முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக விளங்குகிறீர்கள்.
ஆதலால் பல்லின, பல்மொழி, பல்மத சமூகங்கள் சமாதானத்துடனும் பாதுகாப்புடனும் சௌஜன்யத்துடனும் வாழ்வதற்கு சமஷ்டி விதிமுறைகளின் நடைமுறைகள் பற்றி கற்றுக் கொள்வதும் பரீச்சயப்படுத்திக் கொள்வதும் முக்கியமானதாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila