வடக்கு மாகாண சபை அதிகாரப்பகிர்வில் பங்களிப்பு செய்வதற்கென விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக எதிர்வரும் இருபத்தியாறாம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபை கூட்டத்தின் போது பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்படவுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிற்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே மேற்படி விடயம் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பரவலாக்கத்தை வலியுறுத்தவுள்ள இந்த குழுவிற்கு முதலமைச்சர் தலைமை தாங்கவுள்ளார். ஆட்சியிலுள்ள அரசாங்கம் தமிழர் பிரச்சனை தொடர்பில் தீர்வு திட்டம் ஒன்றினை வழங்கப்போவதாக கூறிவரும் நிலையில், அந்த தீர்வு திட்டம் ஒற்றையாட்சிக்குள் அமைந்தது எனவும், இதானல் தமிழர் தரப்பிற்கு எவ்வித பிரயோசனமும் இல்லை எனவும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேயே அதிகாரப்பரவலாக்கத்தை வலியுறுத்தும் வகையில் வடக்கு மாகாண சபையினால் ஒரு குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதனை சட்டத்ரனிகள் மூலமாக நெறிப்படுத்தி மத்திய அரசிற்கு உரிய ஆலோசனைகளை வழங்குதல் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமை தாங்கவுள்ளதோடு, முதற்கட்டமாக பிரேரணை ஒன்றும் சபையில் முன்மொளியப்படவுள்ளது. இப்பிரேரணை அனைவரது ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டவுடன் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை வடக்கு மாகாண பேரவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.