இறை வழிபாட்டில் பயபக்தி என்றொரு விடயம் உண்டு. பயம், பக்தி என்ற இரு சொற்பதங்களும் வேறுபட்டவை.
எனினும் இறைவழிபாட்டில் இவ் இர ண்டு சொற்பதங்களும் ஒன்று சேர்ந்தாக வேண் டும். அப்போதுதான் வழிபாடு பயனுடையதாகும்.
தனித்த பயம் அர்த்தமற்றது. தனித்த பக்தி ஆணவமானது. ஆக, பயபக்தி இணையும் போது தான் தெய்வீகம் உற்பவமாகிறது.
கடவுளுக்கு அடுத்த படியாக பயபக்தி என்பது குரு மீதும் இருத்தல் வேண்டும். குருவிடம் பயம் கொண்டால் வித்தை ஏறாது. மாறாக குருவிடம் பக்தி மட் டுமே செலுத்தப்படுமாயின் ஞானம் புகாது.
எனவே பயபக்தி என்பது கடவுள், குரு என்ற இரு நிலைகளுக்குப் பொருந்துவது.
அடுத்த படியாக குடும்பம் என்ற சமூகக் கட்டமைப்பு வரும் போது பெற்றோருக்கு பிள்ளைகள் பயப் படுவது; பிள்ளைகளுக்கு பெற்றோர் பயம்கொள் வது என்ற நிலை உருவாகிறது. இங்கு இருக்கக் கூடிய பயம் என்பது ஒரு கட்டுப்பாடு என்பதாகக் கருதப்படும்.
அதாவது தீய செயல்களில் இறங்காமல், தீய செயல்களைச் செய்யாமல் ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பயம் என்பது அவசியம். எனினும் பொதுவில் கோழைத்தனத்தை நாம் பயம் என்றே வழக்கத்தில் அமுலாக்கிக் கொண்டோம்.
இதனால் பயம் என்பதற்கு கோழைத் தனத்துக்குரிய பொருளைக் கொடுத்து விடுகிறோம். இது மகா தவறு.
தமிழில் இருக்கக் கூடிய பயம் என்ற சொல் ஒரு மனிதன் தன்னை நேரிய வழியில் இட்டுச் செல்ல மிகவும் அவசியமானதாகும். நீதிக்குப் பயம் கொள்ளல், மனச்சாட்சிக்குப் பயப்படுதல், பாவம் செய்து விடுவோம் என்று பயம் கொள்ளுதல், இன்றைய எனது ஆணவம் நாளை எனக்கான ஊழ்வினையாக மாறும் என்று பயம் கொள்ளுதல் என்பன அவசியப்படுகின்றது.
கணவனுக்கு மனைவி பயப்படுதல், மனைவி க்கு கணவன் பயப்படுதல், பிள்ளைகள் பெற்றோருக்குப் பயப்படுதல், பெற்றோர் பிள்ளைகளுக்குப் பயப்படுதல், சமூகத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சட்டத்துக்குப் பயப்படுதல் என்ற ஓர் உணர்நிலைக் கட்டமைப்பே மனிதனை-மனித வாழ்வை செம் மைப்படுத்துகிறது.
இங்குதான் அரசியல்வாதி தனக்கு வாக்களித்த வாக்காளனுக்குப் பயப்படுதல் என்ற விடயம் முன்னிற்கிறது. எனக்கு வாக்களித்து என்னைப் பாராளுமன்றத்துக்கு; மாகாண சபைக்கு; உள்ளூராட்சி சபைக்கு அனுப்பி வைத்த வாக்காளனுக்கு நான் பயப்பட வேண்டும் என்று அரசியல்வாதி நினைக்க வேண்டும். வாக்காளனுக்கு பயப்படத் தவறும் எந்த அரசியல்வாதியாலும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது.
இந்த நிலைமை இருக்குமாயின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது சுயலாபத் தைக் கருதுவாரேயன்றி, மக்கள் நலன்பற்றி இம்மியும் சிந்திக்கமாட்டார்.
இற்றைய எங்கள் அரசியலில் இதனைத் தாராளமாகக் காணமுடியும். பொதுவில் எங்கள் தமிழ் அரசியலில் எதேச்சாதிகாரமாக நடக்கின்ற போக்கை காணமுடியும்.
இது ஒரு இனத்தின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதல்ல. அரசியல்வாதிகள் வாக்காளர்க ளுக்கு; மக்களுக்குப் பயப்படவேண்டும்.
வாக்காளர்கள் மக்கள் சேவை செய்யும் அரசி யல்வாதிகளுக்குப் பயப்பட வேண்டும். இந்த மாறு பட்ட கட்டமைப்பு அவசியமானது. இது நடைமுறை யில் இருந்தால் மட்டுமே அனைத்து நிர்வாகச் செயற்பாடுகளும் செம்மைப்படும்.
இதை விடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களைச் தேடிச் சென்றால் அதுபோதும். நாங் கள் வெல்லுவோம் என்றால், நாம் சொல்வதை மக்கள் கேட்க வேண்டும் என்று அரசியல்வாதி நினைத்தால் எல்லாம் அம்போதான். எதற்கும் மக்கள் தரப்பில் அழுத்தம் கொடுப்பதற்கான அமைப்புகள் இருக்க வேண்டும். இது பற்றி தமிழ் மக்கள் சிந் திக்கத் தலைப்பட்டு விட்டனர் என்பதற்கான சான்றாதாரங்கள் எழத் தொடங்கியுள்ளன.