சுன்னாகத்தில் கழிவு ஒயில் பாதிப்பு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

சுன்னாகத்தில் கழிவு ஒயில் பாதிப்பு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

சுன்னாகத்தில் கழிவு ஒயில் பாதிப்பு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

யாழ்.சுன்னாகம் கழிவு ஒயில் கலப்பால் பாதிப்படைந்த நீரைக் குடிக்கலாமா? குடிக்கக்கூடாதா? என்பது தொடர்பாகப் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் பகிரங்க கருத்தரங்கு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை முருகேசு பண்டிதர் வீதியிலுள்ள சுன்னாகம் தெற்குச் சனசமூக நிலையத்தின் முத்தமிழ் மன்ற மண்டபத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைச் செயலாளர் ச. தனுஜனின் தலைமையில் இடம்பெற்ற போது கலந்துகொண்ட புத்திஜீவிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்களால் இப் பிரச்சினைக்கு உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாகப் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாதிக்கப்பட்ட நான்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிரதேசம் முழுவதற்கும் நன்னீர் விநியோகத்தை எவ்வித தாமதங்களும் இன்றித் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை இவ் அனர்த்தம் தொடர்பாகக் அதிகூடிய கவனமெடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்துக் கிணறுகளின் நீரும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அக் கிணறுகளின் உருமையாளர்களுக்கு அவை பற்றிய தனித்தனி அறிக்கைகள் வழங்கப்படவேண்டும். அத்துடன் ஏற்கனவே ஆய்வுகளில் இனங்காணப்பட்ட அபாயகரமான நிலையில் உள்ள கிணறுகளை அடயாளப்படுத்தி உடனடியாக அத் தகவலை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அத்துடன் உடலியல் பாதிப்புக்களுக்கான மருத்துவ நிவாரணங்களை உடனடியாக வழங்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிற்கும் கிணற்று நீரை வடிகட்ட காபன் நீர் வடிகட்டிகளை இலவசமாக வழங்கவேண்டும்.
இப் பிரதேசத்தில் நீரியல் ஆய்வு மையம் ஒன்றினை ஸ்தாபிக்கவேண்டும். தொடர்ச்சியான ஆய்வுகளைச் சரியான முறையில் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
இவ் இயற்கைப் பேரனர்த்தத்திற்குச் சரியான தீர்வு கிடைக்கும்வரை வடமாகாண சபை முன்பாகவும் ,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு எதிராகவும் மக்கள் அனைவரும் அணிதிரண்டு தொடர்ந்து போராடவேண்டும் ஆகிய தீர்மானங்கள் எட்டப்பட்டது.
இக்கருத்தரங்கில் சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன், பொறியியலாளர் ம. சூரியசேகரம், சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோர் பிரதான கருத்துரைகளை ஆற்றியதுடன் குறிப்புரைகளை சுன்னாகம் தபாலகத்தின் ஓய்வு நிலைத் தபாலதிபர் இ. திருநாவுக்கரசு, சுன்னாகம் தெற்குக் கலைவாணி சனசமூக நிலையத் தலைவி திருமதி ச. சிவாஜினி,ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ப. சசிகுமார்,புதிய ஜனநாயக மாக்சிஷக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் ஆகியோர் நிகழ்த்தினர் .
அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila