சுரேஸ் அணியில் இருந்து வெளியேறினார் சிவமோகன்


வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியக் கலாநிதி சிவமோகன் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா முன்னிலையில் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.

வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி ஒன்றின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வைத்தியக் கலாநிதி சிவமோகன் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடம் இருந்து தமிழரசுக் கட்சியின் அங்கத்துவத்தினைப் பெற்று தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இவ்வாறு தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்ட சிவமோகன் கடந்த 2013-09-21 அன்று இடம்பெற்ற வடமாகாண சபைக்கான தேர்தலிலும் அதன் பின்னர் கடந்த ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியபோதும் அண்மைக் காலமாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் மீது அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்.மாட்டீன் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் வைத்து கட்சியின் தலைவர் மாவை .சேனாதிராஜாவிடம் அங்கத்துவத்தினைப் பெற்று கட்சியில் இணைந்து கொண்டார்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila