இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் இவர் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வரும் சுஸ்மா நாளை கூட்டமைப்பை சந்திக்கிறார்: யாழ்.விஜயம் இரத்து
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று(வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இரு நாட்டு பல் துறைசார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்கும் வகையிலேயே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கவுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் நிகழ்ச்சி நிரலில் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான விஜயம் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும் இறுதி நேரத்தில் அந்த விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=311352#sthash.uNNVhx5h.dpuf