தமிழ் மக்களின் இதயங்களை அறிந்த இருதய வைத்திய நிபுணர்கள் இருவர்

புத்தி, மனம் என இரண்டு விடயங்கள் உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
புத்தி எனும் அறிவு கற்றலாலும் அனுபவத் தாலும் வளப்படுத்தப்படும். மனம் என்பது இறை சிந்தனை, ஆன்மீக உணர்வு, அன்பு, அகிம்சை என்பவற்றால் பக்குவப்படுத்தப்படும்.

இங்கு அறிவின் வியாபகம் இனம், மொழி, தேசம் என்ற நிலைகளில் தனது ஈர்ப்பைக் கொண்டிருக்கும்.

மனமானது பிறரை நேசித்தல், பிறர்க்குக் கொடுத்து உதவுதல், ஆன்மீக தானத்தைச் செய்தல் என்பவற்றோடு தொடர்புபட்டிருக்கும்.
மேற்கூறிய இரண்டு விடயங்கள் குறித்தும் மேலும் தெளிவை ஏற்படுத்துவதற்காக பின் வரும் விடயத்தை முன்வைக்க விளைகின்றோம்.

கடந்த 24ஆம் திகதி காலைப்பொழுதில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நீதி யரசர் பேசுகிறார் என்ற முதலமைச்சர் விக் னேஸ்வரன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் போதனா வைத் தியசாலையின் இருதய வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவரின் உரையைக் கேட்டவர்கள் பிரமித்துப் போயினர்.

ஒரு இருதய வைத்திய நிபுணர் தமிழ் மக்க ளின் அபிலாசைகளை முன்மொழிந்த நிதர் சனத்தின் திறனே பிரமிப்புக்குக் காரணம் என லாம்.

மிகப்பழுத்த தமிழ் அரசியல்வாதிகள் அமர்ந் திருந்த அரங்கு அது. அதிலும் குறிப்பாக முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தர் உட்பட முன்னி லைப்பட்ட அத்தனை தமிழ் அரசியல்வாதி களும் இருந்த அரங்கில், தமிழ் மக்களின் அரசியல் சூழ்நிலையை மிகத்தெளிவாக; விளங்கு தமிழில் வைத்திய நிபுணர் பூ.லக்ஷ் மன் அவர்கள் எடுத்துரைத்தபோது,

தமிழ் மக்களின் இதயங்களில் ஏற்படக் கூடிய அழுத்தம் மட்டுமன்றி, தமிழர் தம் இதயத் தின் துடிப்புப் பேசுகின்ற; தமிழினத்தின் வாழ் வும்  உரிமையும் என்ற விடயத்தையும் வைத் திய நிபுணர் பூ.லக்ஷ்மன் அவர்கள் அறிந்து கொண்டு, அதனைத் தக்கார் இருக்கும் அவை யில் தெளிவுபடுத்தினார் எனும்போது நெஞ்சம் உரம் கொண்டது. 

தமிழனை எவரும் ஏமாற்ற முடியாது. அவ் வாறு ஏமாற்றினால் அறிவுடைத் தமிழரின் அடையாளமாய் தமிழ் மகன் ஒருவர் மேடை ஏறி நயத்தக்க நாகரிகத்துடன் உண்மையை - யதார்த்தத்தை - தமிழரின் நினைப்பை எடுத்து ரைப்பார் என்ற மெய்ம்மையில் நெஞ்சம் உரம் கண்டது.
இது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடக்க, அதேநாள் மாலைப்பொழுதில் நாவற் குழி மண்ணில் கலாநிதி ஆறு.திருமுருகனின் தூய சிந்தனையில் துலங்கிய திருவாசக அரண்மனையை, அவுஸ்திரேலியாவில் வாழும் எங்கள் புலம்பெயர் உறவு, இருதய வைத்திய நிபுணர் வை.மனோமோகன் அவர்கள் திறந்து வைக்கிறார்.

என்னே அற்புதம். திருவாசக அரண்மனை அமைவதற்கு நிலம் கொடுத்து, பணம் கொடு த்து யாழ்ப்பாணத்து நுழைவாயிலாய் இருக் கும் நாவற்குழியில் திருவாசகத்தேன் நம் இத யத்துக்கு அருமருந்தாய் அமைவதற்கு வழி செய்தார் எனும்போது,

எங்களின் இரண்டு இருதய வைத்திய நிபு ணர்கள் ஒரேநாளில் புறவாழ்வுக்கும் அகவாழ் வுக்கும் வழியுரைத்தனர்.
இப்பெருமை ஈழத் தமிழினத்துக்கே உரிய தென்ற மிடுக்கில் உறுதிகொண்ட மனத்தின ராய் எழுந்து நிற்போம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila