
தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
புதன் கிழமை இரவு மார்ட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரான வைத்திய கலாநிதிபி.லக்ஷ்மன், சிவசுதன், விஜயசுந்தரம் உள்ளிட்ட ஏழு பேர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
வைத்திய கலாநிதி ரவிராஜும் இதில் பங்கேற்றுள்ளார். இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்ட முன்வரைவு மாவை.சேனாதிராஜாவி டம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் அரசி யல் ரீதியான பிரச்சினைகள் உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டுவது குறித்து ஓரணியாக செயற்படுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. எனினும் குறித்த சந்திப்பில் எவ்விதமான இறுதித் தீர்மானங்களும் எடுக்கப்பப்படவில்லை. அதேநேரம் இவ்விடயம் குறித்து தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்துவதென இணக்கம் காணப்பட்டுள்ளது.