கலப்புத் திருமணத்திற்கு முன் தமிழருக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள்: சி.வி

தமிழ் மக்களுக்கு கொடுக்கவேண்டிய உரித்துக்களைக் கொடுங்கள். அதற்குப் பின்னர் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார். 9வது தேசிய சாரணர் ஐம்போறி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சாரணியர் ஆரம்பித்து 100 வருடங்கள் கடக்கின்றன. அத்துடன், யாழ். மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கை முழுவதிலும் இருந்து சாரணியர்களை அழைத்து வந்து நிகழ்வினை நடாத்துவது முக்கியமான நேரம். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்துள்ள இளம் சாரணியர்கள் ஒன்றிணைந்து எதையும் சாதிக்க முடியுமென்று என்று எடுத்துக்காட்டும் வகையில் சாரணியர் பாசறை நடைபெறுகின்றது. எமது சகல மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டினை கட்டி எழுப்ப வேண்டுமாயின், சாரணியத்தின் குறிக்கோள்கள் எமக்கு முக்கியமானது. ஆனால் அண்மைக்காலத்தில் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டிருந்தார். கலப்புத் திருமணங்கள் மிகவும் அவசியமென்று, கலப்பு திருமணத்தினை எதிர்;ப்பவன் அல்ல. எனது இரு மகன்களும் சிங்கள பெண்களையே திருமணம் செய்துள்ளார்கள். தமிழ் மக்களுடைய உரித்துக்களைக் கொடுங்கள். சட்ட பூர்வமாக கொடுக்க வேண்டியவற்றினைக் கொடுங்கள். அதன்பின்னர் கலப்புத் திருமணங்கள் நடக்கட்டும் என்றார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila