இந்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடித்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள்,வயல்கள், மீன்பிடிப்பகுதிகள் தொழிற்புலங்கள் என பல பகுதிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் திருஞானசம்பந்தர் மணிவண்னன் என்ற தனியாரின் காணியை பௌத்த பிக்கு ஒருவர் விகாரை அமைக்க சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார். இதனை கண்டித்து அப் பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறித்த காணி உரிமையாளருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்காமல் மாற்றுக் காணியை வழங்கும் தவறான முன்னுதாரணத்தை எதிர்காலத்திற்கு வழங்க உதவி அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
காணி உரிமையாளருக்கு நியாயத்தை பெற்றுக்ககொடுக்கும் விதமாக காணியை அவருக்கு மீளப் பெற்றுக் கொடுப்பதுடன் இந்த விடயத்தில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் எழுதிய கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.