வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் சமர்ப்பிக்க தயாரிக்கப்பட்ட கடிதத்தில் தானும் ஒப்பமிடவில்லையென அமைச்சர் டெனீஸ்வரனும் மறுதலித்துள்ளார். குறித்த கூட்டத்தில் தான் பங்கெடுக்கவில்லையெனவும் மறுதலித்துள்ள அவர் தனது ஒப்பத்தை போலியாக இட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த நடவடிக்கைகளின் முக்கிய சூத்திரதாரியாக உள்ளதாக சொல்லப்படும் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானமே ஊடகங்களிற்கு செய்தியை வழங்கியிருந்ததாகவும் எனினும் அப்போது ஒப்பமிட்டவர்களது பெயர்பட்டியலை கடிதத்தினிலிருந்து கிழித்தெறிந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதனால் முதலமைச்சரிற்கு வழங்கப்பட்ட கடிதத்தில் தம்முடன் பெருமளவிலானோர் இருப்பதாக காண்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் போலி ஒப்பங்களும் அமைச்சர்களின் பேரில் கூட வைக்கப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
Add Comments