பெண்கள் மீதான வன்கொடுமை, வன்புணர்வு என்பன மிகவும் வேதனையானவை. திட்டமிட்டே வன்முறை செய்கின்றனர் ஆண்கள். அப்பாவிப் பெண்களும், சிறுமிகளும் பலிக்கடாவாகி உயிர் விடுகின்றனர்.
சிறைப்பட்ட பெண்ணினம் தம் அறிவால் சிறைக்கதவை உடைத்துச் சுதந்திரமாக வாழ முற்படும் போது உடலாலும், உள்ளத்தாலும் பலவீனப்படுத்தி மகிழ்கின்றது ஆணினம்.
சுதந்தரமாகப் பெண்கள் சுவாசிக்க முடியாத நிலையில் வன்புணர்வுகளும், படுகொலைகளும் நிகழ்கின்றன. இதயத்தைப் பிழிந்த எத்தனையோ வன்புணர்வுகளைக் கண்டோம்.
பச்சைக் குழந்தை முதல், அப்பாவிப் பெண்கள் உள்ளடங்கலாக வயோதிப மாதுக்கள் வரை வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளன.
வித்தியாவின் கூட்டு வன்புணர்வு எம்மை நிலை குலையச் செய்தது. ஆர்ப்பாட்டங்கள், கதவடைப்பு, கருத்து மோதல்கள் தொடர்ந்தன. கூட்டுக் காமுகர்கள் கைதாகினர். ஒன்பது மாதங்களாகியும் தண்டனை கிடைத்ததா?
பாலியல் வன்புணர்வுக் கொலைகளுக்கெல்லாம் கைது ஒன்றே தீர்வு என்றால், பெண்கள் பலிக்கடாவாகிக் கொண்டேயிருப்பார்கள். சிறைக்குள்ளே உணவும் கிடைக்கிறது.
பெண் படுகொலைகளைச் சந்தித்த குடும்ப உறவுகள் கண்ணீரோடு வாழ்கின்றனர். வித்தியாவின் படுகொலையின் பின் இன மத வேறுபாடுகளைக் கடந்து ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த போதும். குற்றவாளிகளுக்குத் தண்டனையும் இல்லை. வன்புணர்வுகளும், வன்கொடுமைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
வவுனியா உக்கிளாங்குளம் மாணவச் சிறுமி தனது வீட்டிலேயே வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டுள்ளாள். பதின்மூன்று வயதான பச்சைக் குழந்தையை உண்டு பசியாறித் தூக்கிலிட்ட காமுகர்கள் வாழத்தான் வேண்டுமா? வாழ்வது தான் நியாயமா?
பெண்கள் என்றால் கருவிலே தொடங்கும் வன்முறை கல்லறை வரை தொடர்கிறது. ஆண்களால் என்றால் மறுக்க முடியுமா?
நாளை கல்விசார் தலைவியாக மலரவேண்டிய அரும்பினை முகர்ந்து கசக்கி எறிந்த காமுகரைச் சட்டம் தண்டிக்காது விடுவதுதான் முறையா? மத்திய கிழக்கு நாடுகள், மேலை நாடுகளில் பெண்களுக்கு வழங்கப்படும் சுதந்திரம் எமது நாட்டில் இல்லாமல் போவது ஏன்?
போதைப் பொருள் கடத்தலுக்கே சாவுத் தண்டனை என்றால், இங்கு நடக்கின்ற வன்புணர்வுப் படுகொலைகளுக்கு எப்படியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை எமது சட்டம் ஒரு தடவை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
சிறுவர் தினம், மகளிர் தினம், பெண்களுக்கெதிரான வன்முறை வாரம் நாம் கொண்டாடலாமா? இந்த நிலை தொடருமானால் சட்டம் தண்டனை வழங்கத் தயங்கினால் எமது நாடு பெண்களின் சாபத்துக்கு ஆளாகிவிடும் என்பதை எவரும் மறந்து விடலாகாது.
பெண்மை போற்றப்படும் நாடுதான் வளர்ச்சியடையும். போராட்ட காலங்களில் கூட, தாயாக, மகளாக, பேத்தியாக ஒவ்வொரு பெண்ணும் இராணுவத்துடன் போராடி ஆண்களைப் பாதுகாத்த நன்றியைக் கூட மறந்து விட்டனர்.
பெண்ணால் வந்து பெண்ணையே அசிங்கப்படுத்தும் இவர்கள் மனிதப் பிறப்பா? மனிதம் மரித்து விட்ட ஜென்மங்கள். சீ இப்படியும் ஒரு ஆண்களா? தமிழன்னையின் புதல்வர்கள் என்று சொல்ல முடியாத அரக்கர்கள்.
காலம் காலமாகப் பட்ட வேதனைகளையும், துன்பங்களையும் மறக்க முடியாமல் வாழும் நாம் மீண்டும் மீண்டும் கண்ணீரோடு வாழும் அவலம்.
சட்டம் என்பது சந்தையில் விற்பனையாகும் பொருள் அல்ல. சட்டங்கள் நீதிக்காகவே இயற்றப்பட்டவை. பெண்களின் படுகொலைக்காகச் சட்டத்தரணிகள் சரியான வாதங்களை முன்னெடுத்து நீதியை நிலை நாட்டவேண்டும்.
வறுமைப்பட்ட குடும்பங்களில் ஏற்படும் பெண் படுகொலைகளுக்கு வாதிட சட்டத்தரணிகள் முன்வரவேண்டும். பக்கம் சாராது சட்டத்தை கையில் எடுக்கவேண்டும். ஒரு வழக்கில் இரு சட்டத்தரணிகள் முன்வந்து தமது வாதத் திறமைகளை நிலைநாட்டி உண்மைகள் கூட பொய்யாகின்றன. சட்டத்தரணிகள் எமது நாடு, எமது பெண்கள் என்கிற மனநிலையோடு வாதிட வேண்டும்.
ஆக, பாலியல் குற்றவாளிகளுக்கு சாவுத் தண்டனை ஒன்றே தக்க பாடம். ஒரு குற்றவாளிக்குச் சாவுத் தண்டனை நிறைவேற்றினால் போதும். பாலியல் வன்முறை மாயமாகிவிடும்.
சாவுத்தண்டனை நிறைவேற்றாதவரை பாலியல் வன்கொடுமைகள் ஓயப் போவதில்லை. ஆர்ப்பாட்டம், நடத்துவதாலோ, பணிப் புறக்கணிப்பாலோ காமுகர்கள் திருந்தப் போவதில்லை.
சட்டத்தின் தூசுகள் தட்டப்பட்டு தண்டனை துரிதப்படுத்தப்பட்டால் ஒழிய, பெண்கள் இந்த நாட்டில் சுயமாக வாழ முடியாது. அப்பாவிச் சிறுமிகள் அரைகுறை வயதில் கொடுமையாக அழிந்தொழிந்து போகாது
வாழ வேண்டுமெனில் காமதாரிகளை இல்லாதொழிப்பதைவிட வேறோன்றும் செய்யமுடியாது. சட்டம் நீதிக்காகவே நீதி ஒன்றே பெண்ணினத்தை வாழ வைக்கும்.
- உடுவிலூர் கலா