காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனோரின் உரிமைகளுக்காக போராடிவரும் பொது அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார். இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். எமது உறவுகளை கடத்திய படை அதிகாரிகளை ஆதாரத்துடன் அடையாளப் படுத்திய போதிலும் அவர்களுக்கு எதிராக அரசாங்கமும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்களும் தவறியுள்ள நிலையில், நாம் கேள்வியுற்ற இந்த இரகசிய முகாம் தொடர்பில் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதாலேயே ஊடகங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். |
அனுராதபுரத்தில் இரகசிய வதைமுகாம்! - காணாமற்போனவர்கள் தடுத்து வைப்பு?
Related Post:
Add Comments