இந்த ஆட்சியை குழப்ப வேண்டாம் என மேற்குலம் இந்தியாவும் கோருகிறது: கஜேந்திரகுமார்

இந்த ஆட்சியை நாம் விரும்பியே கொண்டு வந்துள்ளோம். இதனை குழப்ப வேண்டாம் என மேற்குலகமும், இந்தியாவும் எங்களிடம் கோருகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தல் கூட்டத்தில் வவுனியாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு தீர்வுத் திட்டத்தை நாம் பெற்றுக் கொண்டாலும் கூட அது எந்தளவிற்கு நின்று பிடிக்கும் என்ற கேள்வி இருக்கிறது. ஒரு தலைப்பட்சமாக சிங்கள இனம் இதை மீறவெளிக்கிட்டால் என்ன செய்வது. ஏனெனில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் மீறும் போது அதனை கண்காணித்து ஆதரவு வழங்கிய சர்வதேச சமூகம் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது போல இங்கும் வருமா என்ற கேளவியும் இங்குஎழுப்பப்பட்டது.
குறிப்பாக அரசியலை எப்படி பார்க்க வேண்டும் என்றால் பலத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும்.
விசேடமாக இன்று இருக்கின்ற அரசியல் நிலமைகள் குறிப்பாக சர்வதேச அரசியலை எடுத்து பார்த்தால் ஆட்சி மாற்றம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி ஏற்ப்பட்ட பின்னர் மேற்கு தூதரகங்கள், இந்தியா போன்ற நாடுகள் எங்களிடம் கேட்பது இந்த ஆட்சியை குழப்ப வேண்டாம்.
அராங்கத்திற்கு அதிக நெருக்கடியை கொடுக்க வேண்டாம். எனென்றால் இருந்த ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி. ஆனால் தற்போது வந்துள்ள ஆட்சி மேற்குலகமும், இந்தியாவும் விரும்பிய ஆட்சி. அதனால் தயவு செய்து குழப்ப வேண்டாம் என கேட்கிறார்கள்.
ஆனால், குழப்புவது எமது நோக்கமல்ல. எமது நோக்கம் மஹிந்தா ராஜபக்ஸவை மீண்டும் கொண்டு வருவதல்ல. எங்களுக்கும் சில தேவைகள் இருக்கின்றது. அந்த தேவைகளை சர்வதேச சமூகம் எமது நியாயமான விடயங்களை விளங்கிக் கொண்டு ஒரு தீர்வைப் பெற்றுத் தாருங்கள். நாங்கள் சில விட்டுக் கொடுப்புக்களை செய்துள்ளோம்.
உங்கள் நாடுகளில் உள்ள சமஸ்டி முறையையே நாம் கோருகின்றோம். நாங்கள் உலகத்தில் இல்லாத ஒரு ஆட்சியை கேட்கவில்லை. ஆகவே இங்கு உண்மையில் பிரச்சனைரயாக இருப்பது சிங்கள தேசியவாதம். இந்த நியாயமான பிரச்சனைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக நாம் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் மற்றும் ஜனநாயக ரீதியாக குரல் கொடுக்க வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு காட்ட வெளிக்கிட்டால் அது உங்களுக்கு ஒரு இடைஞ்சலாக இருக்கும்.
சிங்கள மக்களை அது குழப்பும். அவர்கள் மத்தியில் குழப்பம் வந்தால் மீண்டும் அரசியல் மாற்றம் வரலாம். ஆகவே, இதை எல்லாவற்றையும் சரியாக விளங்கிக் கொண்டு உங்களுடைய அரசாங்கமாக நீங்கள் கூறும் இந்த அரசாங்கத்திற்குள் உங்களுக்கு உள்ள செல்வாக்குகளை பயன்படுத்தி எமது நியாயமான கோரிக்கை தீர்த்து தாருங்கள் என்றே சர்வதேசத்திடம் கோருக்கின்றோம். அதற்கான ஒரு மக்கள் இயக்கமாகவே இந்த தமிழ்
மக்கள் பேரவை கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.​
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila