இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடனும் அவதானத்துடனும் செயற்பட்டு வருகின்றது. அதேபோல் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. எனினும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் அதனால் நாட்டுக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. ஏனெனில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக மாற்று சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படும். அது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு தரப்புகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த விவகாரம் தொடர்பில் கட்சி தலைவர்களுடனும் ஏனைய தரப்புகளுடனும் எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும். எவ்வாறு இருப்பினும் பாதுகாப்பு தொடர்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் பயங்கரவாதச் தடைச்சட்டம் நீக்கப்படுவதில் விரைவில் எந்தத் தீர்மானங்களும் எடுக்க முடியாது. இதில் ஸ்திரமான தீர்மானங்களை பெற்றுக்கொள்ள நீண்டகாலம் தேவைப்படுகின்றது. எனினும் மாற்று நடவடிக்கை ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோல் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது இராணுவத்தை தண்டிக்கவா என கேள்வி எழுப்ப அவசியம் இல்லை. எமது இராணுவத்தையோ அல்லது தனிப்பட்ட எவரையும் தண்டிக்க இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இவை நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகள் என்பதை மறந்துவிடக்கூடாது. மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள புலிப் பயங்கரவாதிகளை விடுதலை செய்யமுடியாது. அவர்கள் நாட் டுக்கு எதிராக செயற்பட்ட நபர்கள் ஆகவே, எக்காரணம் கொண்டும் புலிப் பயங்கரவாதிகளை விடு தலைசெய்ய மாட்டோம். தவறான கருத்துகளை பரப்பி அதன்மூலம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத் தும் செயற்பாடுகளை உடனடியாக அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். |
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் புலிகளுக்கு விடுதலையில்லை! - ருவான் விஜேவர்த்தன
Add Comments