மெகஸின் சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை நேற்று(வெள்ளிக்கிழமை) சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில் அதுதொடர்பில் ஆதவனின் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த சட்டத்தரணி மங்களேஷ்வரி சங்கர், தங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் காணப்படும் பட்சத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் இல்லாத பட்சத்தில் தமக்கு பிணை வழங்குமாறும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள் ஏற்கனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர். என தெரிவித்துள்ளார்.
எனினும் சட்டத்தரணி மங்களேஷ்வரி சங்கரின் குற்றச்சாட்டை சிறைச்சாலைகள் திணைக்களம் மறுத்துள்ளது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல் நிலை தொடர்பில் தாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதாகவும், தொடர்ந்தும் வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, 6 அரசியல் கைதிகள் நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.