ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை? பாதுகாப்பு குறித்து இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டால் அதற்கு அடுத்தபடியான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
தமிழக அரசினால் விடுதலை செய்யப்பட்ட 7 பேரும் தமது தாயகப் பிரதேசமான வட மாகாணத்திற்குச் சென்று வாழமுடியுமா என்பது குறித்தும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆலோசிக்கும் எனவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருக்கும் சுமார் 4 ஆயிரம் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாகவும் முன் எச்சரிக்கையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசினால் இவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டால் அவர்களை வடபகுதியில் வாழ்வதற்கு அனுமதிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி  குறிப்பிட்டார

நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதலை வழங்குவது தொடர்பில் தமிழக அரசு கவனம் செலுத்திவருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டும் அவர்கள் மீது காணப்படுகின்றது.அவ்வாறு அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் அவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வடபகுதிக்கு செல்வதற்கு அனுமதிப்பது தொடர்பிலும், அதற்கு அடுத்தபடியாக நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்கும்.

மேலும் அவர்கள் மீது விசேட விசாரணை ஒன்று நடத்தப்படுவது தொடர்பிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழக அரசின் அறிவிப்பின் பின்னர் கவனம் செலுத்தும்.அத்துடன் அந்த 7 பேரும் தமது தாயகத்திற்குத் திரும்பி வாழ்க்கையை தொடர்வதற்கு அனுமதிக்கப்படுவது குறித்தும் ஆராயப்படும்.

இதேவேளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட 4 ஆயிரம் ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அறியமுடிகின்றது.

இது குறித்து எனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர்கள் நாடு திரும்பும் பட்சத்தில் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் – என்றார்.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் தாயகம் திரும்பியபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila