‘தேசிய நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும்’ எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கருத்தரங்கில் பங்கேற்று உரையாடிய அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்-
‘கடந்த அரசாங்கத்தில் விடுவிக்கப்பட்ட கேபி, தயாமாஸ்டர் உள்ளிட்டோர் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காதவர்கள், தற்போது அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆயுதங்கள் வழங்கியோர் வெளியேயும், கேபி வழங்கிய ஆயுதத்தினை பயன்படுத்தியவர்கள் சிறைகளிலும் உள்ளனர். கேபியிடம் பணமும் கப்பலும் இருந்தமையாலேயே அவர் வெளியே உள்ளார். இவ்வாறு வடக்கிலும், தெற்கிலும் அரசியல்வாதிகள் இனவாதத்தினை வளர்த்து, கடந்த காலங்களில் செயற்பட்டது போன்று தற்போதும் செயற்பட எத்தனிக்கின்றனர்.
இனிவரும் காலங்களில் அவ்வாறு இனவாத அரசியலுக்கு இடமளிக்காது செயற்பட வேண்டும். வடக்கிலும், தெற்கிலும் விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. மக்களுக்கு செய்யவேண்டிய விடயங்களை எந்த அரசாங்கமும் செய்யவில்லை’ என்றார்.