தமிழினி மிகுந்த ஆளுமை மிக்கவர் என்றும் பின்தள்ளப்பட்ட சமூகத்திலிருந்து தலைமைக்கு வந்தவர். சமூக, சாதிய, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த போராட்டமே தமிழினி போன்றவர்களை வெளிக்காட்டியது. பேச்சுவார்த்தை கால கட்டத்தில் தமிழீழத்தின் சிறந்த போராளி என்றும் தலைவி என்றும் தமிழினி பேசப்பட்டார். போராட்ட காலத்தில் சிறப்பாக செயற்பட்ட அவர் புனர்வாழ்வின் போது பல கொடுமைகளுக்கு ஆளானார். இன்று சமூக வலைத்தளத்திலும் இணையங்களிலும் தமிழினி மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்படுவதும் வருத்தம் அளிக்கிறது.
ஜே.வி.பி இரண்டு முறை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது சிங்கள மக்கள் என்றுகூட பார்க்காமல் அறுபதாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். மன்னம் பேரி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சிங்கள மக்களை தெற்கிலேயே அழித்த இராணுவமும் காவல்துறையும் வடக்கில் தமிழ் மக்களை எவ்வாறு அழிப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். மன்னம் பேரிகளுக்காவும் தமிழினிகளுக்காகவும் ஒன்றுபட்டு போராடவே எமது கட்சி விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.