நல்லாட்சி அரசாங்கத்தின் திரிய பியச வீடமைப்புத்திட்டத்தின் கீழ் கிண்ணியா ஆயிலியடி பிரதேசத்தில் ஒரு தொகுதி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வசதி குறைந்தவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒருவீட்டின் நிர்மாணப் பணிகளுக்காக 75 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அதிகார சபையின் பிரதேச அதிகாரிகள் இதற்கான நிர்மாணப் பணிகளை பொறுப்பெடுத்துள்ளனர்.
எனினும் குறித்த வீடமைப்பு நிர்மாணப் பணிகளின் போது பயனாளிகளுக்கு வெறுமனே 58 ஆயிரம் ரூபாவுக்கான பொருட்களை கையளித்துவிட்டு எஞ்சிய பணத்தொகையை அதிகாரிகள் கையாடிவிட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளிடம் பல்வேறு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ள போதிலும் அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சமூக சேவை மற்றும் நிவாரணப் பணிகளில் மர்ஹும் ஹசன் மௌலவி மற்றும் அஸீஸ் பவுண்டேசன் தலைவர் சாதிக் ஹசன் ஆகியோரினால் மேற்கொள்ளப்படும் பணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்திலும் ஊழல் மற்றும் மோசடிகள் தலைவிரித்தாடுவதாகவும் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.