பேரவையின் தீர்வுத்திட்ட முன்வரைபு - புலம்பெயர் உறவுகளுக்கு பகிரங்க அழைப்பு


தமிழ்மக்கள் பேரவையின் நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்டமுன் வரைபு தொடர்பில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை மிகவும் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்கள் தோறும் மக்கள் சந்திப்புக்கள் பல மட்டங் களில் நடைபெற்று மக்கள் கருத்துக்கள் பதியப்பட்டுவருவதும் இதில் மக்கள் மிகவும் உற்சாகத்துடன் பங்கு பற்றுவதும் மிகவும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கின்றது.

ஈழத்தமிழ் மக்களின் உரிமை விடயத்தில் புலம் பெயர்ந்துள்ள எங்கள் உறவுகளின் வகிபங்கு மிகவும் அவசியமானது.எனவே, மக்கள் இயக்கமாகிய தமிழ்மக்கள் பேரவை தயாரித்துள்ள தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பில், புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் தங்களின் கருத்துக்களை தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்பு ரீதியாகவோ பதிவு செய்து கொள்ள முடியும்.

தீர்வுத்திட்டமுன் வரைபை www.tamilpeoplescouncil.org என்ற தமிழ் மக்கள் பேரவையின் இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்யமுடியும்.

மிகவிரைவில் தீர்வுத்திட்ட முன்மொழிவு முழுமையாகத் தயா ரிக்கின்ற பணி ஆரம்பிக்கப்பட வுள்ளதால், எதிர்வரும் 31 மார்ச் 2016ஆம் திகதிக்கு முன்னதாக புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தங்களின் கருத்துகளையும், அபிப்பிரா யங்களையும் politicalsub@ tamilpeoplescouncil.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +94 75 699 3211 என்ற இலக்கத் தொலைபேசி ஊடாகவோ அனுப்பி வைக்கமுடியும்.

இதேவேளை தமிழ் மக்கள் பேரவை மக்கள் நலன்சார்ந்த பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருப்பதால், இவ் வேலைத் திட்டங்களில் புலம்பெயர் உறவுகளை பங்கேற்கு மாறும் தமிழ் மக்கள் பேரவை வேண்டி நிற்கின்றது. புலம் பெயர் மக்கள் எமது நட வடிக்கைகளை உடனுக்குடன் அறிவதற்கும், தமது கருத்துக்களை வெளிப்டுத்தவும் எமது இணையத் தளத்தினூடாக அல்லது www. facebook.com / groups / tamilpeoplescouncil என்ற முகநூல் குழுவில் இணைவதன் மூலம் மிகவும் நேர்த்தியாக செயற் பட முடியும்.

தமிழ்மக்கள் பேரவையின் உத்தியோகபூர்வ முகநூல் விபரங்கள் எமது இணையத்தளத்தின் “தொடர்பு” பக்கத்திலும், தீர்வுத் திட்ட மக்கள் மயப்படுத்தல் விபரங் கள் “தீர்வுத்திட்டவரைபு” பக்கத்திலும் அறிந்துகொள்ளலாம் என தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila