இந்தக் கூட்டமானது வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவியைப் பறிப்பதற்கான அல்லது கவிழ்ப்பதற்கான கூட்டமென பெயர் குறிப்பிட விரும்பாத தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முதலில் வடக்கு மாகாண முதலமைச்சரின் பதவியைக் கவிழ்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுக்களான முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாத தீர்வுத்திட்டம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடாதென போலிக் கையெழுத்துக்கள் பெறப்பட்டமை, வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கெதிரான மோசடிக் குற்றச்சாட்டு இவையனைத்தும் முதலமைச்சரால் முறியடிக்கப்பட்ட போதிலும் தற்போது அடுத்த திட்டத்திற்கான கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்றய கூட்டமானது ‘தற்போதைய அரசியல் நிலையும் தீர்வுத் திட்டமும்’ என்ற தலைப்பில் கடிதத்தின் தலைப்பு அச்சடித்து உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால், கூட்டமானது வடக்கு மாகாண சபையைக் கலைப்பது அல்லது முதலமைச்சரை பதவி விலகச்செய்வது தொடர்பிலேயே போய்க்கொண்டிருப்பதாகவும் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இவ்வாறான போக்குகள் தொடருமாயின் தமிழரசுக் கட்சி இரண்டாகப் பிரியும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக கடந்த வாரம் சம்பந்தனின் வீட்டில் சம்பந்தன், மாவை, சுமந்திரன், அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் இரகசியமாகச் சந்தித்து இதற்குரிய சதித்திட்டத்தைத் தீட்டியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கூட்டமும் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.