
ஞானசார தேரர் தலைமையினில் வருகை தந்த குழுவினரை கொக்கிளாயினில் தமிழ் மக்களது காணிகளை சுவீகரித்து அமைக்கப்பட்டுவரும் விகாரையின் தலைமை புத்தபிக்கு அழைத்திருந்ததாக தெரியவருகின்றது.
திட்டமிட்ட வகையினிலான சிங்கள குடியேற்றம் மற்றும் மீனவர்களது பிரசன்னம் தொடர்பினில் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் போன்றவர்கள் குரல் எழுப்பிவருகின்ற நிலையினில் கூட்டமைப்பினரின் தலையீடுகள் தொடர்பினில் ஆராயவே ஞானசார தேரர் வருகை தந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் பகுதியினில் வேகமாக முன்னெடுக்கப்பட்டுவரும் குடியேற்றங்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடரும் நிலையினில் இவ்விஜயம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.