தமிழ் மக்களின் விழிப்பே பேரவை என்ற பேரலை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை


தமிழ் மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர் என்பதற்கான அடையாளமே தமிழ் மக்கள் பேரவை என்ற பேரலைதான் என வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்கள் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன், வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன், த.வசந்தராசா ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற போது, அங்கு முதலமைச்சர் விக் னேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில், 

தமிழ் மக்கள் பேரவை இது காறும் செய்த சேவை மகத்தானது. 
நாம் தொடங்கிய இந்தசெயற்பாட்டால் ஏற்பட்டுள்ள நன்மைகளை நாம் பரிசீலித்தோமானால் நில மட்ட மக்களுடன் கலந்துறவாடி  அரசியல்தீர்வு சம்பந்தமான அறிவை அவர்களுக்குப் புகட்டி அதேநேரம் அவர்களிடம் இருந்து அவர்களின் அனுபவத்தின் வாயிலாக அவர்கள் வெளியிட்ட கருத்துக்களை நாம் பெற்று நாமும் பயன் பெற்றுள்ளோம்.

அடுத்து எமது அரசியல் வானிலே ஒரு விடிவெள்ளியைப் பவனிவர வைத்துள்ளோம். தமிழ் மக்கள் பேரவையானது உறங்கிக் கிடந்த எம்மவர்களை உசுப்பேத்திவைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. 
எவ்வாறு காலையில் சுக்கிரன் எனும் விடிவெள்ளி பிரகாசமாகத் தோன்றுவதால் யாவரும் வானத்தை நோக்கி அதை உற்றுநோக்குகின்றார்களோ அதேபோல் யார் இந்த தமிழ் மக்கள் பேரவை? அதனுடைய உள்நோக்கம் என்ன? எதை அடைய விரும்புகின்றார்கள்? என்றெல்லாம் பலரைச் சிந்திக்கவைத்துள்ளது எமது பேரவை. 

அந்தச் சிந்தனையின் உந்துதலால், நிந்தனைக்குள்ளான சில கருத்துக்கள் கூட இப்பொழுது வந் தனைக்குரியதாக ஏற்கப்பட்டுள்ளது. முன்னர் எல்லாம் “சமஷ்டி என்று சொல்லாதே சமர் வந்திடும் பின்னாலே” என்று கூறியவர்கள் கூட “சமஷ்டி என்று சொல்லடா சரிசமமாய் நில்லடா” என்று கூறும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளார்கள். 

எப்பொழுதுமே தெற்கில் வசிக்கும் எம்மவர்களுக்குவடகிழக்கில் வாழும் எம்முடன் ஒருகருத்து வேறு பாடுஉண்டு. “சூழலுக்கு ஏற்ப எம்மைமாற்றிக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் சூழல் எங்களை விழுங்கிவிடும்” என்ற அவர்களின் எண்ணமே அது. 
பல இனக் கலவரங்களுக்கு அவர்கள் அங்குமுகங் கொடுத்ததாலோ என்னவோ சூழலைக் கவனித்தே தமது கருத்தை வெளிப்படுத்துவர். 

அண்மையில் கூட ஒரு கொழும்புத் தமிழன்பர் என்னிடம் கேட்டார் “நீங்கள் கேட்பது கிடைக்குமா? கிடைக்காததை ஏன் கேட்கின்றீர் கள்?” என்று. நான் கூறினேன் “நாங்கள் நோய்க்கு மருந்து கேட்க pன்றோம். அவர்கள் மருந்தை வைத்துக் கொண்டு மருந்து கைவசம் இல்லை என்கின்றார்கள். அப்படி யானால் இருப்பதைத்தா என்று கேட்கச் சொல்கின்றீர்களா? இருக்கும் பனடோலை மட்டும் உள் ளேற்றிநோவைக் கொஞ்ச நேரத்திற்குக் குறைக்கச் சொல்கின்றீர்களா?” உடனே அன்பருக்கு என் மேல் கரிசனை ஏற்பட்டுவிட்டது. “உங்களைத் தீவிரவாதப் போக்குடையவர் என்று ஏற்கெனவே கூறு கின்றார்களே” என்றார். 

“தீவிரவாதிகள் என்று பிரித்தானியர்களால் அடையாளங்காட்டப்பட்டவர்களுக்கு இன்று எம்மக்கள் சிலைவடிக்கின்றார்களே! தீவிரவாதம் என்பதுநாம் எங்கிருந்து எதைப் பார்க்கின்றோம் என்பதில் இருக்கின்றது. சிங்களமக்களுக் குப் பிழையான தகவல்களை எமது அரசியல்வாதிகள் ஊட்டிவிட்டுள்ள னர். அதிலிருந்து அவர்கள் விடுபடாதவரையில் எங்களைத் தீவிரவாதிகள் என்றுதான் கூப்பிடுவார்கள்” என்றேன்.

நாங்கள் ஒரு முக்கியமான விட யத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும். உண்மையை, யதார்த்தத்தை வெளியிடுவதற்கு நாங்கள் பின்னற் கலாகாது. ஏனென்றால் எமது தேவைகளைநாங்கள் உண்மைக்கு மாறாகக் குறைத்து விளம்பினால் எமது கஷ்டங்களை மற்றவர்கள் அறியமுடியாது போய்விடும். எமது வலியை, எமது வேதனையை, எமது தேவைகளை, எமது அபிலாஷைகளை அறியாமலே மற்றவர்கள் வாழ்க்கை நடத்துவார்கள். இன்று அப்படித்தான் தெற்கில் மக்கள் வாழ்கின்றார்கள். 

மூன்றாவதாகச் சிங்களத் தலைவர்கள் எமது தேவைகளை, மனோநிலையை, எதிர்பார்ப்புக்களை அறியாதவர்கள் அல்ல என்பதை நினைவுறுத்தவிரும்புகின்றேன். ஆனால் எமது தமிழ் மக்கள் பேர வையின் மூலமாகத் தமிழ் மக்களின் எண்ணப்பாடுகள் வெளி வருகின்றன என்றதும் அவர்கள் சற்று அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்கள். எப்படியாவது எம்மைத் தீவிரவாதிகளாய்ப் பட்டம் சூட்டிக் கலைத்துவிடலாம் என்று எண்ணு கின்றார்கள். ஆனால் நாங்கள் தீவிரவாதக் கருத்துக்களுக்கு இடங் கொடுக்காது யதார்த்தமான தீர்வை நோக்கி எமது கருத்துக்களை முன் வைத்ததால் அவர்கள் சற்றுத் தடு மாறுகின்றார்கள்.

தந்தை செல்வா 1972-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தான் கூறு வதைத் தமிழ் மக்கள் புதிய தொரு தேர்தலில் ஏற்றால் அரசாங்கம் அர சியல் யாப்பைத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் தான் தோற் றால் அதன் பின் அரசியலிலிருந்து தான் வெளியேறிக்கொள்வதாக வும்அறிவித்தார். 1975 பெப்ரவரிவரை தேர்தலைப் பின்போட்டுக் கொண்டு போனது இலங்கை அரசாங்கம். ஏனென்றால் எமது எதிர்பார்ப்புக் களை அரசாங்கத் தலைவர்கள் நன்குணர்ந்திருந்தார்கள். அதன் பின் தேர்தலை நடத்திய போது தந்தை செல்வா அபார வெற்றி பெற்றார். 

இடது சாரியான திரு.வி.பொன் னம்பலம் அவர்கள் வெகுவாகத் தோற்கடிக்கப்பட்டார். தேர்தலைத் தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்த தற்குக் காரணம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை இன்றும் சிங் கள அரசியல் தலைவர்கள் அறிந்து கொண்டிருந்தமையே. ஆகவே எமது எதிர்பார்ப்புக்களைச் சிங் களமக்கட் தலைவர்கள் இன்றும் அறிந் தேயுள்ளார்கள் என்று கருது கின்றேன். எம்மை நாமே ஆள வேண்டும் என்றுநாம் கூறுவதில் அவர்கள் பிழை கண்டுபிடிக்க வில்லை. 

எங்கே நாங்கள் சமஷ்டி பெற்றபின்னர் பிரிவினைக்கு வழி அமைத்து விடுவோமோ என்பது தான் அவர்களின் பயம். உல கத்தில் வேறெங்கும் சிங்கள மக் கள் வாழவில்லை. தமிழர்களுக் கும் முஸ்லிம்களுக்கும் இடம் கொடுத்தால் அவர்கள் எம்மை இல்லா தொழித்துவிடுவார்கள் என்று எண் ணுகின்றார்கள். அவர்கள் சந்தே கங்களைப் போக்குவது எமது கடப்பாடாகும்.

எனவேதமிழ் மக்கள் பேரவை மக்களுடன் கலந்தாலோசித்து அர சியல் கருத்துக்களை முன்வைத் துள்ளது. அன்று தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் எம்மைப் பார்த்து இன்று எழுந்து நடமாடத் தொடங் கியுள்ளார்கள். தமிழ் மக்கள் ஏகோ பித்தவாரியாக சமஷ்டியை வேண்டு வதால் அதுபற்றிஆராயத் தொடங் கியுள்ளார்கள். நாம் எமதுக் கடமை களைச் சரிவரச்செய்ய உறுதி பூணுவோம். 

நேற்றைக்கு முன்தினம் ஜேர் மனியில் இருந்துவந்த பாராளு மன்ற உறுப்பினர்களைச் சந்தித் தேன். சமஷ்டி பற்றிகதை வந்த போது தங்கள் நாட்டில் சமஷ்டி முறையே கடைப்பிடிக்கப் படுகின்றது என்றும் அரசரீதியான அலகுகள் எல்லாம் செவ்வனே சுமூகத்துடன் செய லாற்றுகின்றனஎன்றும் கூறினார் கள். அதைத் தயவுசெய்துஎங்கள் சிங்களமக்கட் தலைவர்களுக்குச் சொல்லிவையுங்கள் என்று கூறி னேன். செய்வதாகவாக்களித்தார் கள். இவ்வாறுதான் தெற்கின் தலை வர்களின் மனோநிலையை மாற்ற வேண்டும். 

தமிழ் மக்கள் பேரவை கலை, கலாசாரம் போன்ற மற்றையவிட யங்களிலும் மக்களிடையே தமது பார்வையைச் செலுத்துவது சாலச் சிறந்தது. தமிழ் மக்கள் விழித்துக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு அடையாளமே தமிழ் மக்கள் பேரவை என்றபேரலை. அது சுனாமி போன்ற அலை அல்ல. மிகச்சாதுவான அலை. அதனை எம்மக்கள் தம் மிடையே பரவிவிரவ இடம் அளிப் பதால் அரசியல்;கட்சி மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. 

மாறாக எமது மக்கள் உண்மையை உணரத் தொடங்குவார்கள். எமது பாரம் பரியங்கள் பற்றிஅறியத் தொடங்கு வார்கள். எமது இலட்சியங்களைப் பாதுகாக்க முன் வருவார்கள். ஒற்று மைக்கு வித்திடுவார் கள். 

இந்தப் புனித கைங்கரியத்தில் தமது நேரகாலங்களை, பணத்தை, பல்விதசுகங் களைத் தியாகம் செய்து எமக்கென தீர் வொன்றினை அடையாளப்படுத்திய தீர்வுத் திட்ட உபகுழுவினர் பாராட்டப்பட வேண்டிய வர்கள். எமது பாசத்துக்குரியவர்கள். தொடர்ந் தும் எமதுபேரவையின் மக்கள் பணிசிறக்க வாழ்த்துகின்றேன் என்றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila