வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்கள் தற்போதும் சிங்கள மொழியிலேயே தமது அறிக்கையிடல்களை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டியுள்ள மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ், இதனால் மனிதவுரிமை தொடர்பான விசாரணைகள் பாதிப் படைவதாகவும் அவர் தெரிவித்து ள்ளார்.
வடக்கில் தற்போதும் பொலிஸார் தமது அறிக்கையிடல்கள் மற்றும் பதில் கடிதங்கள் ஆகியவற்றை மேற் கொண்டு வருவதாக குற்றச்சாட்டு கள் முன்வைக்கப்படுவது குறித்து ஆணையாளரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொது வாக எமக்கு வருகின்ற முறைப்பாடுகளில் பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களே கணிசமான அளவில் உள்ளன.
பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்வோர் தமிழ்மொழி பேசுவோராகவே உள்ளனர். அவர்களிடம் முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் அவர் களது மொழியிலேயே தான் நடைபெறுகின் றன. இதில் சம்பந்தப்பட்ட பொலிஸ் தரப்புக்கு நாங்கள் குறித்த முறைப்பாடு தொடர்பில் விளக்கம் கோரும் போது,
அவர்கள் எமக்கு வழங்கும் பதிலறிக்கை முழுமையாக சிங்கள மொழியிலேயே உள் ளது. இந்த பதிலை நாங்கள் முறைப்பாட்டா ளருக்கு அனுப்பும் போது, அவருக்கு சிங்கள மொழி தெரியாமையால் அவர்கள் எம்மிடமே மீண்டும் வந்து சிங்கள மொழியில் வந்து ள்ளதாக முறையிடுகின்றனர்.
நாங்கள் பொலிஸாரால் சிங்கள மொழியில் அனுப்பப்படும் பதிலை தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்தால் முறைப்பாட்டாளர் அதில் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப கூடும் ஆகையால் இது தொடர்பில் பொலிஸாரே உரிய மொழியில் பதிலை வழங்க வேண் டும் என ஆணையாளர் கோரியுள்ளார்.
இதேவேளை நல்லாட்சி அரசு பொறுப் பேற்றவுடன் யாழ்.வந்த நீதி அமைச்சர் வட க்கு நீதிபதிகளுடனான சந்திப்பின் போது தமிழ் மொழியிலேயே பொலிஸார் அனைத்து நடவ டிக்கைகளையும் மேற்கொள்வார்கள், தமிழ் பேசும் பொலிஸார் தேவையான அளவு வட க்கில் கடமையில் உள்ளனர். தேவை ஏற்ப டின் தமிழ் பேசும் பொலிஸார் இணைத்து கொள்ளப்படுவார்கள் என உறுதியளித்து சென்றிருந்தார்.
எனினும் நீதி அமைச்சரது உறுதிமொழி தற்போது வரை நிறைவேற்றப்படாமலே உள்ளது. இதனால் மனிதவுரிமை ஆணைக் குழுவின் விசாரணைகள் பாதிப்படைவதாக வும், பாதிக்கப்பட்டவருக்கு தீர்வை பெற்று கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சுட்டி க்காட்டப்பட்டுள்ளது.