கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுவரும், காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வில் சாட்சியமளித்தன் பின்னர், எமது செய்திச் சேவைக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி முல்லைத்தீவில் தமது அண்ணனோடு சேர்த்து சுமார் ஆயிரம் பேரை இராணுவத்தினர் பிடித்து வைத்திருந்ததாகவும், அவர்களை பேரூந்து ஒன்றில் ஏற்றிச்சென்றதாகவும் குறிப்பிட்டார்.
விசாரணையின் பின்னர் திருப்பி அனுப்புவதாக தெரிவித்த போதும், இதுவரை எவ்வித தகவலும் இல்லையென்றும், தனது அண்ணனை இராணுவத்தினர் இன்னும் தடுத்து வைத்திருப்பதாக தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.