நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் உரிமை எனக்கும் உள்ளது. ஏன் என்றால் நான் இந்நாட்டு குடிமகன். எனினும் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று என்னால் கூற முடியாது. அவ்வாறு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று நினைத்தால் அதற்கான உரிமை எனக்கும் உள்ளது. நான் இலங்கையன் எனும் போது ஏன் முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பலவந்தமாக இராணுவ முகாமுக்குள் சென்றிருந்தார் என குறிப்பிடும் விமர்சனங்ள் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன் நாட்டை பிரிக்கவோ துண்டாக்கவோ நாம் கோரவில்லை. ஒரே நாட்டுக்குள்ளே அதிகாரத்தை கோருகின்றோம். இதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.தனி மாகாணம் வேண்டும் என கேட்பது ஒரே நாட்டுக்குள் தான். இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டிய தேவையில்லை.
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்களே அதிகமாக உள்ளனர். எனவே அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களுக்கே வழங்க வேண்டும். இதேபோன்றே தெற்கில் சிங்களவர்கள் அதிகம் என்பதால் அவர்களுக்கான அதிகாரத்தை அவர்களிடம் வழங்க வேண்டும். இது தொடர்பில் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
நாட்டை பிரிக்க வேண்டும் என யாரும் கோர வில்லை. எல்லோரும் இலங்கையர்களே. நாட்டை யாரும் பிரிக்க முடியாது.கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரை யாடல் ஒன்றுக்காக சென்றிருந்தேன். கலந்து ரையாடல் முடிவின் போது சிலர் என்னிடம் வந்து, எமது இடத்தின் ஒரு பகுதியில் இரா ணுவ முகாம் அமைந்துள்ளது. இதனை நேரடியாக சென்று பாருங்கள் என்றனர்.
இதனையடுத்து நான் இராணுவ முகாமு க்குள் சென்றேன். என்னை யாரும் தடுத்து நிறு த்தவில்லை. நானும் பலவந்தமாக செல்ல வில்லை. அங்கு ஒரு பிரச்சினையும் ஏற்பட வில்லை. ஆனால் நான் அங்கு சென்று பார்த் தேன். மக்கள் கூறியது போல அவர்களின் இடம் சூறையாடப்பட்டிருந்தது. நான் ஒன்றும் கூறவில்லை. இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்திடம் கதைக்கின்றேன் எனக்கூறி அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அங்கு இரண்டு மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர்.
நான் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது இவ்வாறு சென்று அவதானிப்பது வழமை. இதேபோன்று கடந்த காலப்பகுதியில் வலிகாமத்துக்கும் சென்று பார்த்து வந்தேன். அங்கு இராணுவத்தினரும் இருக்கவில்லை. மக்களும் இருக்கவில்லை. இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவித்து பொதுமக்கள் பாவனைக்கு இடத்தை பெற்றுகொடுத்தேன்.
நான் நேரில் சென்று அவதானிப்பது எனது உரிமை. நான் பலவந்தமாக செல்லவில்லை. நான் வாகனத்தில் ஏறி வரும்போது இராணுவ அதிகாரி ஒருவர் தொலைபேசி மூலம், சேர் நீங்கள் வருவீர்கள் என்று முன்னதாகவே அறிவித்து இருந்தால் நான் அதற்கென ஒருவரை ஏற்பாடு செய்து எல்லாவற்றையும் காணப்பித்து இருப்பேன் என்றார். ஆனால் நான் அங்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் போகவில்லை.
நாட்டைப் பிளவுப்படுத்தும் நபர்களே இவ்வாறான கதைகளை கூறுகின்றனர். நான் பலவந்தமாக செல்லும் மனிதன் அல்ல. நாட்டை இல்லாமல் செய்ய எத்தணிக்கும் உதயன்கம்பன்பிலவே இதனை முதலில் கூறியிருந்தார். அந்த மனிதரின் முகத்தை கூட பார்க்க எனக்கு விருப்பமில்லை. இதுதொடர்பில் எவருக்காவது விளக்கம் வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் வந்து கதைக்க சொல்லுங்கள். அதைவிடத்து பொய் கூற வேண்டாம்.