வடமராட்சி கட்டைக்காடு முள்ளி யான் பகுதியை சேர்ந்தவர்களான ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) ஆகிய இருவரும் நேற்று மதியம் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டு உள்ளனர்.
மேறபடி வெள்ளை வான் கடத்தளினால் அப்பகுதியில் நேற்றைய தினம் பெரும் பதற்றம் நிலவியதோடு இது தொடர்பில் வல்வெட்டித்துறை போலீசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கடற்தொழில் செய்து வருவதாகவும் நேற்றைய தினம் தொழில் நடவடிக்கைக்காக கடற்கரைக்கு சென்ற வேளை வெள்ளை வானில் வந்தோர்களால் கடத்தப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேற்குறித்த இருவரும் குடும்பஸ்தர்கள் எனவும் எதற்காக கடத்தப்பட்டார்கள் என தெரியமல் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் முறையிடப்போவதாகவும் குடும்பஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை யாழில் தற்போது இவ்வாறன வெள்ளை வான் கடத்தல்களும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரது கைதுகளும் அதிகரித்து வரும் நிலையில்,
தமிழ் மக்களிடையே அச்ச நிலை தோன்றியுள்ளது. முதலில் முன்னாள் போராளிகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பின்னர் அவை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கும் நிலையம் தற்போது வடக்கு கிழக்கில் காணப்படுகின்றது. மேலும் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் கடத்தப்படுபவர்கள் எதற்காக கடத்தப்படுகின்றார்கள் என தெரியாமலே உள்ளது.
அரசாங்கமும் தமிழ் கட்சிகளும் இவை தொடர்பில் வாய் திறக்காமலே உள்ளனர். இந்த நிலையில் முன்னால் போராளிகள் வடக்கில் வாழ்வதனை அச்சமாக கொண்டு தற்போது வேறு இடங்களுக்கு நகர ஆரம்பித்துள்ளனர். மேலும் முன்னால் போராளிகளை எதிர்வரும் முப்பதாம் திகதி கொழும்பிற்கு வருமாறு அழைக்கப்பட்டு உள்ளமை தொடர்பிலும் முன்னாள் போராளிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது