முள்ளிவாய்க்காலில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
எமது இனத்திற்கான விடுதலையும் நாம் அனுபவித்தால் மாத்திரதே உயிரிழந்த எமது மக்களுடைய ஆத்மாக்கள் சாந்தியடையும் என அங்கு உரையாற்றிய தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். சாட்சியங்கள் அற்ற படுகொலைகளாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அமைந்துள்ளன.
முள்ளிவாய்க்காலில் 1 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக தமிழர்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்காலில் உயிரிழந்தவர்களின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் தற்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.
வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சுடரேற்றி குறித்த அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாhளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.