விமானப்படை தளபதி பதவி உட்பட விமானப்படையை உரிய முறையில் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்காக குறைந்த பட்சம் ஒரு வருடம் செல்வதனால், நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு செல்வதற்கு அவர்களுக்கு ஒரு வருட காலம் தேவைப்படுகின்றது. ககன் புலத்சிங்களவுக்கு அவ்வாறான ஒன்று இல்லை. கடந்த 2015ஆம் ஆண்டும் ஜுன் மாதம் விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட இவர் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் இறுதி விஜயமாக ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த அனைத்து விஜயத்திற்குமான விமான டிக்கெட்களையும் வணிக வகுப்பிலேயே ஒதுக்கீடு செய்துள்ளார். அனைத்து செலவுகளும் மக்களின் பணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஜயங்களுக்கு இடையில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு தனது குடும்பத்துடன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா விஜயத்தின் போது புலத்சிங்களவின் மகள் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்டிருந்த லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டியவின் குடும்பத்தையும் இணைத்து கொண்டுள்ளார். போலியான காரணங்களை தெரிவித்தே ககன் புலத்சிங்கள இந்த வெளிநாட்டு விஜயத்திற்கு மேற்கொண்டுள்ளார். ஆறு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக தகுதியான விமானங்களை தெரிவு செய்வதற்கு செல்ல வேண்டும் என்பதே அவர் கூறிய காரணமாகும். விமான படைக்கு மேலும் ஆறு விமானங்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதற்கு அதற்கான அனுமதி கிடைக்காத நிலையிலும் கடனை செலுத்துவதற்கு வற் வரியை அதிகரிக்கின்ற நிலையிலும் யுத்தம் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் 6 விமானங்களை கொள்வனவு செய்வது அவசியமற்ற செயற்பாடாகும். அவ்வாறு இருக்கும் போது விமானங்களை பார்ப்பதற்கு பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதேவேளை இலங்கை இதுவரை நேபாளம், அவுஸ்திரேலியா, மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் விமானங்களை கொள்வனவு செய்யவில்லை. எனினும் ககன் புலத்சிங்கள விமான கொள்வனவு செய்வதாக கூறி குடும்பத்துடன் அந்த நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரினால், ககன் புலத்சிங்களவின் போலியான காரணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
8 மாதங்களில் 9 வெளிநாட்டுப் பயணங்கள்! - இலங்கை விமானப்படைத் தளபதி சாதனை
Related Post:
Add Comments