மே 9ம் திகதி மோசடியாளர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து!


விக்கிலீக்ஸிக்கு அடுத்தபடியாக பனாமா பேப்பர்ஸில் எனும் ஆவண கசிவினால் உலகளாவிய ரீதியில் பல செல்வந்தர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர்.இவ்வாறான நிலையில் அந்த ஆவண கசிவில் உள்ள தரவுகளின் விபரங்களை எதிர்வரும் 9ம் திகதி பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.200 நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்கள் வரி ஏய்ப்பு செய்து, பெருந்தொகை பணத்தை நாடுகடந்த நாடுகளில் பதுக்கியுள்ளனர். இது தொடர்பில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் உள்ளதாக ஆராய்தலுக்கான ஊடகவியலாளர்களின் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் காணப்படும் சிக்கல் நிலை காரணமாக பணத்தை மறைத்த நபர்களை அடையாளம் காணுவது கடினமான நிலையாக மாறியுள்ளது. இந்நிலையில் இலகுவில் மோசடியாளர்களை இனங்காணும் வகையில் மிகவும் எளிமையாக அறிக்கை ஒன்றினை வழங்குவதற்கு செயற்படுவதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.பனாமா ஆவண கசிவின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த 46 பேர்களின் பெயர்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் எதிர்வரும் மே மாதம் 09ம் திகதி அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த 46 பேரில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரபல அரசியல்வாதிகள் இருவரும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் மற்றும் விளையாட்டு வீரர் ஒருவரும் உள்ளடங்குவதாக கூறப்படுகின்றது.இதற்கு முன்னர் பனாமா அறிக்கை என வெளியாகிய பெயர் விபரங்கள் சுவிஸ் கணக்கு தொடர்பிலான அறிக்கை என பின்னர் தெரியவந்தது.இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசாரணை நடவடிக்கைகளை செயற்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ள போதிலும் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இது மோசடிகாரர்களை பாதுகாக்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்நிலையில் எதிர்வரும் 9ம் திகதி வெளியாகும் அறிக்கையின் அடிப்படையில் இலங்கையைச் சேர்ந்த பல்வேறு பண முதலைகள் சிக்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila