தமிழகத்தின் அடுத்த 5 வருடங்களுக்கான ஆட்சிப் பொறுப்பினை மக்கள் யாரிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி இன்று (வியாழக்கிழமை) காலை வரை பதிலுக்காய் காத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அ.தி.மு.க. பொதுச் செயளாளர் ஜெயலலிதா ஆட்சிபீடம் ஏறுவதும், அ.தி.மு.க. ஆளும் கட்சியாக தொடரப்போவதும் உறுதியாகியுள்ளது.
இதன் பிரகாரம், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பெருவெற்றியை பெற்று இதுவரை 130 தொகுதிகளுக்கான தமது இருப்பைத் தக்கவைத்துள்ளன. இந்த நிலையில், இனி வரவிருக்கும் தேர்தல் முடிவுகளால் அதிகாரத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்பதால் ஜெயலலிதா 6 ஆவது தடவையாக முதலமைச்சர் ஆகின்றார் என்பதை தமிழகம் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், ஆளுனர் ரோசாய்யாவும் தன்னுடைய வாழ்த்துக்களை ஜெயலலிதாவிடம் பகிர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அ.தி.மு.க. தொடர்ந்தும் முன்னிலையில்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றிருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை தொடக்கம் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், தற்போது வரை சுமார், 200 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விபரங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அ.தி.முக. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.
இதன் பிரகாரம், அ.தி.முக. இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் 117 தொகுதிகளை அ.தி.மு.க. கைப்பற்றியிருப்பதாகவும், 81 தொகுதிகளை தி.மு.க.கைப்பற்றியிருப்பதாகவும் 4. தொகுதிகளை பா.ம.க. கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவியவருகின்றது.
எவ்வாறான போதும், தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியினருக்கு இதுவரை எதுவித ஆசனங்கள் கிடைக்கப்பபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மீண்டும் அ.தி.மு.க ஆட்சியமைக்குமானால் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் ஜெயலலிதா 6ஆவது தடவையாக அமருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறான போதும், இன்று மாலைக்குள் முழுமையான தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துவிடும் என்பதனால் ஆட்சியமைக்கப்போகும் கட்சி தொடர்பான விபரங்கள் ஊறுதியாக தெரியக்கிடைக்கும் என்கின்றது இந்திய ஊடகங்கள்.