இதனால், மீட்புப் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் ஏற்கனவே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, இன்னும் 120இற்கும் அதிகமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாமென மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள மண்சரிவு நாடாளவிச ரீதியில் பரபரப்பையும் அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
அரநாயக்க மண்சரிவு : உயிரிழப்பு 150ஆக அதிகரிக்கலாமென அச்சம்!
கேகாலை அரநாயக்க மற்றும் புலத்கொஹூபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150இற்கும் அதிகமாக இருக்கலாமென அஞ்சப்படுகிறது.
அரநாயக்கவில் இதுவரை 17 பேரின் சடலங்களும், புலத்கொஹூபிட்டிய பிரதேசத்தில் 5 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அரநாயக்க அனர்த்தத்தில் சிக்கிய 134 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் இல்லையென, மீட்புப் பணிகள் குழுவிற்கு தலைமைதாங்கும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, புலத்கொஹூபிட்டிய பிரதேச மண்சரிவில் சிக்கிய 16 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்ற நிலையில், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்புப் பணிகள் இடம்பெற்ற வருகின்றன. மீட்புப் பணிக்காக விமானங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளதாவும், சுமார் 352,374 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து களனி ஆறும் பெருக்கெடுத்துள்ள நிலையில், மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.