வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்திற்கு பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்ற போதும், அதனையும் தாண்டி குறித்த வீட்டுத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கின் வாழ்வாதார, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கில் வாழ்வாதார திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பதிலளிக்க ஒரு வார காலம் அவகாசம் கோரிய அமைச்சர் சுவாமிநாதன், எவ்வாறாயினும், 65ஆயிரம் வீட்டுத்திட்டத்தை எத்தகைய தடைகள் வந்தாலும் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார். யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் நலன்கருதி அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. இவை பொருத்து வீடுகளாக அமைக்கப்படவுள்ளமையே இதற்கு காரணம். நீண்ட கால பயன்பாட்டிற்கும் வடக்கின் காலநிலைக்கும் குறித்த வீடுகள் உகந்ததல்லவென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து தீர ஆராய்ந்து முடிவெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எத்தகைய தடை வந்தாலும் வடக்கில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படும் : சுவாமிநாதன்

Add Comments