சித்திரவதைகள் மற்றும் தடுப்பு முகாம்கள் என்பன குறித்து ஐ.நாவின் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாதென, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கை வந்திருந்த ஐ.நாவின் விசேட நிபுணர்கள், இலங்கையின் நிலவரம் குறித்து சில முரண்பாடான கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், அதுகுறித்து ஊடகமொன்றிற்கு விளக்கியுள்ள அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் சிவில் சமூகத்தின் பாதுகாப்பையே முதலில் பலப்படுத்தியதாக தெரிவித்த அமைச்சர், வடக்கு கிழக்கில் இன்று சுயாதீன செயற்பாடுகளை பலப்படுத்தியுள்ளதாகவும், சித்திரவதைகள் குறித்து ஐ.நா நிபுணர்கள் தெரிவித்த விமர்சனங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்லவென்றும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் கைதுகள் தொடர்பான விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதென அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றம் தொடர்பில் அரசாங்கம் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக முனனேற்றகரமாக செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், காணாமல் போனோர் தொடர்பில் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஜூன் மாதம் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படும் வாய்மூல அறிக்கையானது, உண்மைகளை கண்டறியும் வகையில் பலமான ஒன்றாக அமையுமென குறிப்பிட்டுள்ளார். அநேகமாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரில், இலங்கை, சர்வதேச அழுத்தத்திலிருந்து பூரணமாக விடுபடும் என்றும் குறிப்பிட்டார். இதேவேளை நீதித்துறைசார் விடயங்கள், பயங்கரவாத தடைச்சட்டம் என்பன குறித்து தீர ஆராய்ந்து வருவதாகவும், குறிப்பாக அரசியல் பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வை எட்டலாமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ராஜித மேலும் தெரிவித்தார்.
ஐ.நா நிபுணர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : அரசாங்கம்

Related Post:
Add Comments