யாழில் கைதுகள் - கொழும்பில் ஆஜரா? எந்த சட்டத்திலும் இடமில்லை - இளஞ்செழியன் அறிவிப்பு

வடக்கில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படும் இளைஞர்களை கொழும்பிற்கு கொண்டு சென்று அங்குள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு எந்த சட்டமும் இல்லை என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
'வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்துகின்ற வேண்டும்.
ஆனால் இவர்கள் வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு என தெரிவித்துள்ளார்.
அண்மையில் வடமாகாணத்தில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பலர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்படுகின்ற நபர், அவர் எப்பிரதேசத்தில் கைதுசெய்யப்படுகின்றாரோ அவர் அப்பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றத்தில் முற்படுத்த வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது.
ஆனால், தற்போது கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு நீதிமன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
'குறிப்பாக யுத்த காலத்தில் இவ்வாறு கொழும்பு நீதிமன்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக முற்படுத்தப்பட்டிருந்தமை ஏற்றுக்கொள்ள முடியுமாக உள்ளபோதும் தற்போது நாடு முழுவதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கில் 9 நீதிமன்றங்கள் இருக்கின்ற போதும் மீண்டும் கொழும்பு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவது தொடர்பாக வடமாகாணத்தில் எந்த நீதிமன்றங்களும் இல்லையா? என்ற கேள்வியும் எண்ணமும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.
ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு 70 சதவீதமானவர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இலங்கையிலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் இலங்கையின் நீதிமன்றங்கள் என்றாலும் அரசியலமைப்பு சட்டத்தில் மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ள விடயங்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயமாக உள்ளது.
இந்த நிலையில் இது விடயம் தொடர்பாக மனிதவுரிமை மீறல் செயற்பாடு வழக்கினை 2007ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த சர்வதேச குடியியல் அரசியல் சட்டத்தின் பிரகாரம் மேல் நீதிமன்றில் 3 மாத காலத்துக்குள்ளும் 1 மாத காலத்துக்குள் உச்ச நீதிமன்றிலும் தாக்கல் செய்யலாம் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila